தமிழ்நாட்டிற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்!

தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது

Update: 2024-05-24 11:16 GMT

மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசிடம் தமிழக ஆரசு வலியுறுத்தியிருந்தது. தற்போதுள்ள மருத்துவமனை உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி மேலும் பல மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க, 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவது ஊக்குவிக்கப்படும். மகப்பேறு மற்றும் குழந்தை சுகாதாரத்திற்கான பல்வேறு திட்டங்கள் ஒரு விரிவான திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்த நிலையில், மேலும் 6 கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்துள்ளது. 

மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டையில் இரண்டாவது கட்டமாக புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதுதவிர, 2 அரசு பல்மருத்துவக் கல்லூரிகளும், 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு யூனானி மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும், ஒரு அரசு யோகா மருத்துவக் கல்லூரியும் இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News