Stomach Problem Reason சாப்பிடாம இருந்தாலும் பிரச்னை... அதிகமாக சாப்பிட்டாலும்... அவதி...படிங்க...

Stomach Problem Reason இரைப்பையின் செயல்பாடு பாதிக்கப்படும்போது என்னென்ன பிரச்னைகள் உருவாகின்றன.தொடர்ஏப்பம், இரைப்பை அழற்சி, அதிக அமிலம் சுரப்பு, இரைப்பைப்புண், புற்றுநோய் , ஆகியன தேவைக்கு அதிகமாக சாப்பிட்டாலும் பிரச்னை, சாப்பிடாமல் இருந்தாலும் பிரச்னையே.

Update: 2024-01-08 15:32 GMT

Stomach Problem Reason

மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றுதான்இரைப்பை கோளாறு. இரைப்பை பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

இரைப்பையின் செயல்பாடு பாதிக்கப்படும்போது என்னென்ன பிரச்னைகள் உருவாகின்றன.தொடர்ஏப்பம், இரைப்பை அழற்சி, அதிக அமிலம் சுரப்பு, இரைப்பைப்புண், புற்றுநோய் , ஆகியன தேவைக்கு அதிகமாக சாப்பிட்டாலும் பிரச்னை, சாப்பிடாமல் இருந்தாலும் பிரச்னையே. உடலை டிரிம்மாக, ஸ்லிம்மாக வைத்துக்கொள்கிறேன் என சொல்லி நம் ஊர் பெண்கள் சரியாக சாப்பிடாமல் வயிற்றைக் காய வைக்கின்றனர். அதனால் அநோரெக்ஸியா, புலிமியா,போன்ற வியாதிகளை அவர்களே வரவழைத்துக்கொள்கின்றனர்.

Stomach Problem Reason


பயமே வியாதி

அதிகமாக சாப்பிட்டுவிட்டால்குண்டாகிவிடுவோமோ என்ற கவலை.பயம் காரணமாக தேவைக்கும் குறைவாகவே சாப்பிடுகிறார்கள். இது மிகவும் தவறு. இந்த அநோரெக்ஸியா வியாதி வந்தவர்கள் ஒல்லியாக இருந்தால் கூட நாம் குண்டாக இருக்கிறோமா என்று மனதளவில் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்.

கவலை அதிகமாகி வழக்கமாக சாப்பிடும் அளவை விடக்குறைவாக சாப்பிட்டுஅல்லது நிறுத்தி, கடைசியில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரர் போல ஆகிவிடுவதும்உண்டு. ஆனால் புலிமியா வியாதிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையானவர்கள். இவர்களுக்கு உணவின் ருசியும் சுகமும்வேண்டும். ஆனால் உணவு செரித்து, அதனால் உடலில் கலோரி சேர்ந்து குண்டாக ஆகிவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். அதனால் இவர்கள் வயிற்றுக்குள் உணவை அள்ளிப்போட்டுக்கொண்டு பின்னர் யாருக்கும் தெரியாமல் வாந்தி எடுத்து வெளிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

Stomach Problem Reason


இந்த இருநோய்களின் விளைவுகளானது மிகவும் மோசமானவை. இதயத்துடிப்பானது சிராக இருக்காது. சில சமயம் இதயம் செயலிழந்து மரணம் ஏற்படக்கூடும். சிறுநீரகம் அல்லது கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடும். நோய் எதிர்ப்புச்சக்தியானது குறைந்து போகும்.மாதவிலக்குசுழற்சி ஒழுங்காக இருக்காது, மலட்டுத்தன்மை ஏற்படும். ரத்த சோகை ஏற்படும். இது தவிர மன அழுத்தம், தோல்வி, பயம், அவமானம் போன்ற பிற உணர்வுகளும்ஏற்படும். முகம், கை, கால்களில் அதிகமாக முடி வளர்தல் , உள்ளங்கை, பாதங்கள், ஜில்லிட்டு போதல் போன்ற சாதாரண பிரச்னைகளும் வந்து சேரும். ஆரோக்யமான தேவையான அளவு எடையுடன் இருப்பதுதான் அழகு என்பதை அனைவரும் உணரவேண்டும்.

இரைப்பை- கேஸ் டிரைடிஸ்

நம்மில் பல பேர் வயிற்றில் உருவாகும் வாயுவால் இந்த பிரச்னை ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் கேஸ்டிரைடிஸ் என்பது இரைப்பையில் ஏற்படக்கூடிய ஒரு வீக்கம். இந்த வீக்கம்தான் ,நாளடைவில் அல்சர் உருவாவதற்கான அடிப்படைக்காரணமாக ஆகிவிடுகிறது.

Stomach Problem Reason


இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களில்( தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, )வசிப்பவர்ககளுக்குஇந்த வகை அல்சர் அதிகமாக வருகிறது. இப்பகுதி மக்கள் காரம் மற்றும் மசாலா கலந்த உணவுப்பொருள்களை அதிகம் சாப்பிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம். பொதுவாக 3 விஷயங்களைத் தடுத்துவிட்டால், அல்சர் வருவதைக் குறைக்க முடியும் அல்லது அல்சர் வராமல் தடுத்துவிட முடியும்.

ஹ(ர்)ரி, வொர்(ர்)ரி, கறி

இதில் ஹ(ர்)ரியால் அதாவது, அவசரப்படுவதால் ஏற்படும் டென்ஷன் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரக்கும். அடுத்து ... வொ(ர்)ரி, கவலை தொடர்புடையது. நம்மைப்பற்றி கவலையாக இருக்கலாம் அல்லது இன்னொருவரைப் பற்றிய கவலையாக கூட இருக்கலாம். அடுத்தவர் பற்றிய கவலை என்பதை விட பொறாமை என்பதே பொருந்தும். பொறாமையால் அமில உற்பத்தி அதிகமாகி, அதன் விளைவாக அல்சர் உண்டாகிவிடும். மூன்றாவதாக கறி, சிக்கன்கறி, மட்டன் கறி, ஸ்டஃப்டு குடை மிளகாய் போன்றவைகள்தான். அதிக காரமும், மசாலாவும், சேர்ந்த இந்த வகை உணவுகள் அல்சருக்கு சிவப்புக்கம்பளம் விரித்துவரவேற்றுவிடும்.

Stomach Problem Reason


இரைப்பையை பாதிக்கும் கேன்சர்

*ஹெலிகோ பேக்டர் பைலோரி என்ற கிருமி இந்த கிருமிதான் அல்சர் வருவதற்கு காரணம் என்பதுடன் கேன்சர் வருதற்கும்இதுதான் முக்கிய காரணம் என்று இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

*புகைப்பிடித்தல்

சில ஆண்டுகளுக்குமுன்புவரை , நல்ல வீரியமான மருந்து, மாத்திரைகள் இல்லாத காரணத்தால் வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுஇரைப்பையின் உள்பக்க திசுக்கள் மீது பித்தநீர் பட்டுக்கொண்டே இருக்கும். இதுநாள்பட நாள்பட கேன்சராக மாறிவிடும்.

*நிறைய குடிப்பது, மற்றும் ஏராளமான மசாலா கலந்து உணவுப்பொருள்களைச் சாப்பிடுவது.

Stomach Problem Reason


*இரைப்பையின் உள்பக்கம்’’பாலிப்ஸ்’’ எனப்படும் புற்றுநோய் அல்லாத சிறு சிறு கட்டிகள்இருக்கும். இவை மேலும் பெரிதாகி கேன்சராக மாற வாய்ப்பு உண்டு.

*ரேசியல் என்ற இன ரீதியான காரணங்களைச் சொல்லலாம். இன ரீதியாக தோன்றும் கோளாறுகள் அல்லது வியாதிகளுக்கான காரணங்கள் மரபு ரீதியானது.

கேன்சருக்கான அறிகுறிகள்?

ஒருவருக்கு பசி குறைந்து எடையும் குறையத் தொடங்குகிறதோ, அப்போதே ,டாக்டரைப் பார்த்து உடலைப் பரிசோதனை செய்து கொள் ள வேண்டும். மிகச்சாதாரணமாக நினைக்கும் பசியின்மை, எடைக்குறைதல், போன்றவை பல பெரிய பிரச்னைகளுக்கு தொடக்கமாக கூட இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த இடத்தில் என்னவிதமான கேன்சர் வந்திருக்கிறது எந்த அளவுக்கு அதன் பாதிப்பு இருக்கிறது? என்பதை பரிசோதனைகளுக்கு முன்பாகவே, வெளிப்புற அறிகுறிகள் மூலம்நாம் அறிந்து கொள்ளமுடியும். உணவுக்குழாயும், இரைப்பையும் சேரும் இடத்தில் கேன்சர் இருந்தால், உணவுப்பொருள்களை விழுங்குவதற்கு கஷ்டமாக இருக்கலாம். அது உணவுக்குழாய் கேன்சராக இருக்கும் என்று பார்த்தால் , அது இரைப்பையின் மேல்புறத்தில் வந்திருக்கும் கேன்சராக இருக்கக்கூடும். சிறுகுடலோடு சேரும் இரைப்பையின் கடைசிப்பகுதியில் கேன்சர் வந்திருந்தால், சிறுகுடலோடு இணையும் அந்தப்பகுதி முற்றிலும் அடைபட்டு விடும். அதனால் சிறுகுடலுக்குள் உணவைத்தள்ள இரைப்பை கொஞ்சம் சிரமப்படும். அப்போது வயிற்றுக்குள் பந்து உருள்வது போன்ற உணர்வு ஏற்படும். அடுத்த சிலநிமிடங்களில் சாப்பிட்டஉணவு வாந்தியாக வெளியே வந்துவிடும். சில நேரங்களில் இரைப்பை கேன்சர் எந்த அறிகுறியும் காட்டாமல் அமைதியாக இருக்கும். ஆனால் அது வளர்ந்து அல்லது திசை திரும்பி கல்லீரலுக்கோ நுரையீரலுக்கோ சென்று விட வாய்ப்பு இருக்கிறது.

Stomach Problem Reason



சிலருக்கு கல்லீரல் வீங்கியிருக்கும். வேறு காரணங்களை உத்தேசித்து அல்ட்ரோ சவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால் கல்லீரலில் புற்று நோய் வந்திருப்பது தெரிய வரும்.

தடுப்பது எப்படி?

புகைப்பிடிப்பதையும், புகையிலை கலந்து பொருள்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். மதுகண்டிப்பா அருந்தக்கூடாது. அதிக மசாலா சேர்த்த உணவுகள் வேண்டாம்.பசி இல்லாமல் , எடை குறைந்து கொண்டே போனால் எச்சரிக்கை டாக்டரிடம் செல்வது நல்லது. எனவே நோய் வராமல் தடுப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளப்பாருங்கள்.உடல் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்துங்க......

Tags:    

Similar News