prostate disease homeo treatment in tamil ப்ராஸ்டேட் பிரச்னைகளுக்கு ஹோமியோபதி சிகிச்சையில் தீர்வு கிடைக்குமா?.....படிங்க....
prostate disease homeo treatment in tamil ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் தேவை இல்லை. இதனை எளிமையாகவும் முழுமையாகவும் ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். ஹோமியோபதி மருத்துவத்தில் நோயாளியின் உடல்நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்தே மருந்துகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
prostate disease homeo treatment in tamil
மனித வாழ்க்கை மகத்தானது. இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் நல்லவிதமாகவே பிறக்கிறோம். ஆனால் வாழ்க்கை சூழ்நிலையில் நம் உடலில் பல்வேறு வித நோய்களுக்கு ஆட்படுகிறோம் .இந்த நோய்கள் ஏன் நமக்கு வருகிறது? ...உடலுழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை, மாறிவரும் உணவுப்பழக்க வழக்கம் உள்ளிட்ட காரணிகளினால்தான் நோய்கள் நம்மை தாக்குகின்றன. ஒரு சில நேரத்தில் டாக்டர்களினால் கண்டுபிடிக்க முடியாத புது வகை நோய்களும் தாக்குவதுண்டு. கடைசியில் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின் என்ன நோய் என இனமறிந்து பின்னர் சிகிச்சையைத் துவக்குகின்றனர்.
சரிங்க...பிராஸ்டேட் என்பது என்ன? இந்த உறுப்பில் நமக்கு என்ன மாதிரியான நோய் வருகிறது? இதனை ஹோமியோ சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியுமா? என்பது குறித்து ஹோமியோபதி டாக்டர். முகுந்தன் தெரிவிக்கும்போது,
டாக்டர் எனக்கு ஆறேழு முறை சிறுநீர் போகிறது. சிறுநீர் கழிக்க உட்கார்ந்தால் உடனே வருவதில்லை. மிகவும்மெதுவாக வருகிறது. கடைசியில் சொட்டு சொட்டாக வருகிறது. மிகுந்த எரிச்சல் சில சமயம் ஏற்படுகிறது. யூரின் போன திருப்தியே இல்லை. இதனால் இரவுத்துாக்கம் மிகவும் பாதிக்கிறது என்று சுமார் 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பலர் தெரிவிக்கின்றனர். ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தினால் வரும் பிரச்னைதான் இந்த தொல்லை. மிகவும் தொல்லை தரக்கூடியதாகவும், வயதானவர்களிடையே காணப்படுகின்ற இந்த பிரச்னை பற்றி குறைவான அறிவே மக்களிடம் காணப்படுகிறது.
ப்ராஸ்டேட் சுரப்பி ?
ஆண் இனப்பெருக்க உறுப்பின் ஒரு பகுதிதான் ப்ராஸ்டேட் சுரப்பி. இது சிறுநீர் பையும்,சிறுநீர் போகும் பாதையும் இணையும் இடத்தில் உள்ளது. அதாவது சிறுநீர் பையின் கழுத்து பாகத்தில் சிறுநீர் பிரியும் பாதையை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண், பெண் சேர்க்கையின் போது இந்த சுரப்பி ஒரு மெல்லிய, சற்று வெண்மையான பசை தன்மையுடைய ஒரு திரவத்தை சுரக்கிறது. இதில் ப்ரக்டோஸ் உள்ளதால் விந்தணுவானது உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இது ஒரு லுாப்ரிகண்ட் போன்று செயல்பட்டு விந்தணுக்கள் பெண் உறுப்பு பாதையில் எளிதாக செல்வதற்கு வழி செய்கிறது. இந்த காரத்தன்மையுள்ள திரவத்திலுள்ள என்சைம்கள் கரு முட்டையும், விந்தணுவும், இணைவதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வல்லது. இதனுடைய செயல்பாடு ஆண் ஹார்மோன்களால் செயல்படுத்தப்படுகிறது.
ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் என்பது 40 வயதிற்கு முன்பு அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால் சுமார் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. சுமார் 80 வயதானவர்களுக்கு 75 சதவீதம் இது ஏற்படுகிறது. சிறுநீர் போகும் பாதையில் வயதானவர்களுக்கு பலவிதமான தொந்தரவுகளுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்தான் முக்கிய காரணமாக அமைகிறது.இது வீக்கம் அடையும்போது சிறுநீர் பிரியும் பாதையை இறுக்குவதால் சிறுநீர் செல்வது தடைபடுகிறது.
prostate disease homeo treatment in tamil
ப்ராஸ்டேட் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?
பொதுவாக மனிதனுக்கு ஆண் மற்றும் பெண் ஹார்மோன்கள் இயல்பாக உற்பத்தியாகின்றன. இதில் ஆண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. பெண் ஹார்மோன்கள் மிகக் குறைவாக சுரக்கின்றன. 40 வயதிற்கு மேல் இந்த ஆண் ஹார்மோன்களின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. ஆனால் மிகக் குறைவாக சுரக்கின்ற பெண் ஹார்மோனின் சுரப்பு அதே அளவில் இருக்கிறது. இந்த மாற்றம்தான் ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4 நபர்களில் மூவருக்கு ப்ராஸ்டேட் வீக்கம் ஏற்படுகிறது. இதில் சுமார் 11 ஆண்களில் ஒரு ஆணுக்கு ப்ராஸ்டேட் கேன்சர் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
வீக்கத்தின் அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி அடிக்கடி சிறுநீர் போகும் தன்மைதான். குறிப்பாக இரவில் நோயாளிகள் 4 அல்லது 5 முறை சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டி வரும். இந்த உணர்வு பகலிலும் தொடர ஆரம்பிக்கும். சிறுநீர் கழிக்கும் உணர்வானது மிக அவசரமாக ஏற்படும். இவர்கள் உடனே டாய்லெட்டிற்கு செல்லாவிட்டால் எங்கே தானாகவே சிறுநீர் வெளியே வந்துவிடுமோ? அல்லது கட்டுப்படுத்த முடியாதோ? என்ற அளவிற்கு ஒரு வேகம் தோன்றும். அப்படி அவர்கள் சிறுநீர் கழிக்க முயலும்போது சிறுநீர் இயல்பாக வராது. சிறிது நேரம் கழித்தே வெளிப்படும். மிகவும் மெதுவாக இடையில் தடைப்பட்டு பிறகு மீண்டும் சிறுநீர் வெளிப்படும். கடைசியில் சொட்டு சொட்டாக சில துளிகள் வெளி வரும். இந்த நோயாளிகளுக்கு சிறுநீர் கழித்த பிறகும் ஒரு திருப்தி இருக்காது . சிறுநீர் பையில் மீதம் கொஞ்சம் சிறுநீர் தங்கிவிட்டது போன்று ஓர் உணர்வு இருக்கும். இவர்கள் சிறுநீருக்காக முக்கும்போது சிறுநீர் எளிதாக வருவதற்கு பதிலாக தடைப்பட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக வெளியேறும். சில நோயாளிகளுக்கு இடுப்புக்கூட்டின் உட்புறத்தில் ஒரு கனமான உணர்வும் மலவாயிலும், மலக்குடலின் கடைசிப் பகுதியிலும் ஓர் அழுத்தமான உணர்வும் ஏற்படலாம். சிலருக்கு தொப்புளுக்கு கீழே அடிவயிற்றில் தொடர்ச்சியாக வலி தோன்றலாம். இதற்கு காரணம் சிறுநீரிலோ அல்லது சிறுநீர் பையிலோ ஏற்படும் கிருமித் தொற்றுதான்.
prostate disease homeo treatment in tamil
ப்ராஸ்டைட்டிஸ்
ப்ராஸ்டேட் சுரப்பியில் அலற்சி ஏற்படுவதை ப்ராஸ்டைட்டிஸ் என்று கூறுகிறோம். சுமார் 50 சதவீத ஆண்களுக்கு ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் இந்த நிலை ஏற்படுகிறது. இது பொதுவாக ப்ராஸ்டேட் சுரப்பியின் வெளிப்புறம் உள்ள திசுக்களை பாக்டீரியா தொற்று கிருமிகள் தாக்கும்போது அதிகம் ஏற்படுகிறது. இது மிகவும் தீவிரமாகும்போது உள்ளுக்கும் பரவுகிறது. இந்த நோயாளிகள் வலியோடு அடிக்கடி சிறுநீர் கழிப்பது, குறிப்பாக துாக்கத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, முதுகெலும்பின் அடிப்பாகத்தில்வலி, காய்ச்சல், குளிர் முதலியன ஏற்படும். நாள்பட்ட ப்ராஸ்டேட் அழற்சிக்குக் காரணம் சிறுநீர் பாதையில் ஏற்படுகின்ற கிருமி தொற்றுதான். இதில் ஆண், பெண் சேர்க்கையின் போது விந்து வெளியேறும்போது மிகுந்த வலியும் அல்லது ரத்தம் கலந்த விந்து வெளியேறும் நிலைஏற்படலாம்.
prostate disease homeo treatment in tamil
ப்ராஸ்டேட் புற்றுநோய்
ஆண்களில் வயதானவர்களுக்கு மிக அதிகம் ஏற்படுகின்ற புற்றுநோய் இந்த ப்ராஸ்டேட் கேன்சர்தான். குதத்தின் வழியாக விரலைவிட்டு பரிசோதனை செய்யும்போது ப்ராஸ்டேட் சுரப்பி கட்டியாக அல்லது வீக்கமாகத் தட்டுப்படும். சுமார் 2 செ.மீ. விட்டத்திற்கு சற்றே தடிமனாக, ஒழுங்கற்ற வடிவத்தில் கட்டி இருக்கும். இந்த நோயாளிகளுக்கு இடுப்புக்கூட்டின் உட்புறத்தில் ஓர் இனம் புரியாத வலியும், முதுகெலும்பின் அடியில்வலியும், சிறுநீர் கழிக்கும்போது மிகச் சிரமப்பட்டு சிறுநீர் வெளியேறுவதும் வலியும் அல்லது சொட்டு சொட்டாக ஒழுகுவது போன்ற பல தொந்தரவுகள் ஏற்படும். இதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காமல் விட்டுவிட்டால் இந்த புற்று நோய் அருகாமையில் உள்ள உறுப்புகளையும் தாக்கி உயிருக்கே கேடு விளைவிக்கும்.
ஹோமியோபதி சிகிச்சை
ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயம் தேவை இல்லை. இதனை எளிமையாகவும் முழுமையாகவும் ஹோமியோபதி மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். ஹோமியோபதி மருத்துவத்தில் நோயாளியின் உடல்நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்தே மருந்துகள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் கான்ஸ்டிடியூஷனல் சிகிச்சையால் ப்ராஸ்டேட் சுரப்பி இயல்பான நிலைக்கு வருவதோடமில்லாமல் ஒரு முழுமையான ஆரோக்யமான நிலையையும்கொடுக்கிறது.
நன்றி:டாக்டர். முகுந்தன், சேலம்.