அமெரிக்கன் அகாடமி மூளை நரம்பியல் துறை தனித்துவ உறுப்பினரானார் டாக்டர் அலீம்

அமெரிக்கன் அகாடமி மூளை நரம்பியல் துறை தனித்துவ உறுப்பினராக திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ. அலீம் தேர்வாகி உள்ளார்.

Update: 2023-12-14 15:46 GMT

டாக்டர் எம்.ஏ. அலீம்.

அமெரிக்கன் அகாடமியின் மூளை நரம்பியல் துறை தனித்துவ உறுப்பினராக திருச்சியை சேர்ந்த டாக்டர் எம்.ஏ. அலீம் தேர்வாகி உள்ளார்.

மருத்துவ துறையின் ஒவ்வொரு பிரிவுகளிலும் சிறப்பாக சேவை செய்பவர்களை அமெரிக்கன் அகாடமி என்ற நிறுவனம் தனித்துவம் வாய்ந்த உறுப்பினராக (பெல்லோ) சேர்த்து வருகிறது. அந்த வகையில் திருச்சியை சேர்ந்த டாக்டர் எம். ஏ. அலீம்  ஃபெல்லோ ஆப் பிரஸ்டீஜியஸ்  அமெரிக்கன் அகாடமி நியூராலஜி 2024 ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் அலீம் திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஆவார். இவர் தற்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் மூளை நரம்பியல்  துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் திருச்சி ஏ.பி.சி. மருத்துவமனை மூளை நரம்பியல் துறை மருத்துவ நிபுணராக உள்ளார்.

டாக்டர் அலீம் இந்தியன் அகாடமி நியூராலஜி மற்றும் இந்தியன் காலேஜ் ஆப் பிசிசியன் ,ராயல் காலேஜ் ஆஃப் பிசிசியன்ஸ் ஆகியவற்றிலும் ஏற்கனவே உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் இருந்து அமெரிக்கன் அகாடமி மூளை நரம்பியல் துறையின்  தனித்துவம் வாய்ந்த உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் மருத்துவர் டாக்டர் எம்.ஏ. அலீம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் திருச்சி மாவட்ட  நலப்பணிகள் பொது நிதி குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். சிறந்த சமூக சேவகராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News