புதிய தொழிலை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் மனைவி
GV Prakash Wife-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.;
GV Prakash Wife-தமிழ்த் திரையுலகம் கொண்டாடும் பிரபலங்களில் ஒருவர் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இவர் இசையமைத்த 'கிரீடம்' திரைப்படப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும்த வரவேற்புகளை பெற்றவை. தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாகவும் இருந்து வருகிறார்.
இவர், வெயில் (2006), கிரீடம் (2007), பொல்லாதவன் (2007), நான் அவள் அது (2008), சேவல் (2008), அங்காடி தெரு (2009), ஆயிரத்தில் ஓருவன் (2009), இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் (2009), மதராசபட்டினம் (2010), ஆடுகளம் (2011), தெய்வத்திருமகள் (2011), மயக்கம் என்ன (2011), முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012), ஓரம் போ (2007), எவனோ ஒருவன் (2007), காளை (2007), குசேலன் (2008), சகுனி ( 2012 ), தாண்டவம் (2012 ), ஏன் என்றால் காதல் என்பேன் (2012), பென்சில்(2013), அசுரன் (2019), சூரரைப் போற்று ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் உறவினர் என்ற அடையாளத்தோடு வெள்ளித்திரையில் நுழைந்தாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.
ஜி.வி.பிரகாஷ் நடிகராகவும், இசையமைப்பாளராக பல பல ஹிட் பாடல்களை கொடுத்து கலக்கி வருகிறார். ஆனால் நடிகராக அவர் இன்னும் சரியான வெற்றியை ருசித்துப் பார்க்கவில்லை.
அண்மையில் அவருக்கு சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. இந்த விருது பெற்றதற்கு ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரித்தனர்.
புதிய தொழிலை தொடங்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மனைவி..
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 27ல் இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாசுக்கும் சைந்தவிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது. சைந்தவி ஒரு கருநாடக இசைப்பாடகியும் தென்னிந்திய திரையிசைப் பாடகியும் ஆவார். இவர் தனது 12வது வயது முதல் பாடி வருகின்றார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவி ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். 'சவுண்ட்ஸ் ரைட்' என்ற பெயரில் ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோ ஒன்றை சென்னையில் திறந்துள்ளார். இந்த ஸ்டூடியோவின் திறப்பு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு, சீன் ரோல்டன், ஸ்ரீநிவாஸ், ஹரி சரண், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சைந்தவி கூறுகையில், சில வருட கனவு கொரோனாவால் நின்றுவிட்டதாகவும் தற்போது நிறைவேறி உள்ளதாகவும் சைந்தவி கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2