vijay sethupathi salary for aranmanai 4-என்னது..விஜய் சேதுபதிக்கு இவ்ளோ சம்பளமா..?

vijay sethupathi salary for aranmanai 4-இயக்குனர் சுந்தர்.சி-ன் அரண்மனை 4ம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2023-01-27 07:29 GMT

vijay sethupathi salary for aranmanai 4-இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் 2014 ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. யாரும் எதிர்பார்க்காத செம ஓட்டம்.

அரண்மனை வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை 2வது பாகம் 2016ம் ஆண்டில் மீண்டும் வெளிவந்தது. அந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத்தொடர்ந்து நடிகர் ஆர்யாவை வைத்து அரண்மனை 3ம் பாகம் வெளியானது. இந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றியைதந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

vijay sethupathi salary for aranmanai 4


முயற்சியை கைவிடாத இயக்குனர்

3ம் பாகம் சுமாராக போனாலும் தனது முயற்சியை கைவிடாத வேதாளம் போல் இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை 4ம் பாகம் ஈடுபப்தற்குத் தயாராகிவிட்டார். அவர் இயக்கும் அரண்மனை 4ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக சுந்தர்.சி பிறந்தநாள் கொண்டாடிய போட்டோவும் வெளியானது.

விஜய் சேதுபதி சம்பளம்

இந்த நிலையில் விஜய் சேதுபதி அரண்மனை 4ம் பாகத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் வாங்கப் போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அரண்மனை 4ம் பாகத்தில், இயக்குனர் சுந்தர்.சி, விஜய் சேதுபதி,நித்யா மேனன், நிக்கி கல்ராணி,அனகா மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News