சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மனு தள்ளுபடி..!

Chinnathirai Chitra Death News-சீரியல் நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யவேண்டும் என கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி.

Update: 2022-08-04 06:24 GMT

Chinnathirai Chitra Death News

Chinnathirai Chitra Death News-சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கேட்டு கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று கூறி சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தன்னுடைய மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் இருந்தன.அதனால் ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், சீரியல் நாடகங்களில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என்று ஹேம்நாத் சித்ரவதை செய்துள்ளார். அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் ஹேம்நாத் அவரது பெண் தோழியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதார்.அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான், எனது மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஹேம்நாத் தரப்பில் சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார் என்றும், குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எனக்கும் அனைத்து மனைவி சித்ராவுக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்றும், நான் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு என்றும், அவரது மரணம் தற்கொலை தான் என்றும் தெரிவிக்கபட்டது.

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தனக்கு முழுமையாக எதுவும் தெரியாது என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதிட்டபோது, நீதிபதி குறுக்கிட்டு, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் தன்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும் என்றும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது என்றும், தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தனக்கு தெரியாது எனவும் ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The Madras High Court has dismissed the vj chithra death case-இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் ஹேம்நாத்துக்கு உத்தரவிட்டார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News