Viduthalai Trailer மக்கள் படைத் தலைவன் Vs கடைநிலை காவலன்

மக்கள் படைத் தலைவனாக விஜய் சேதுபதி அவரை பிடிக்க முயலும் கடை நிலை காவலராக சூரி கலக்கும் விடுதலை பட டிரைலர் வெளியாகியுள்ளது.;

Update: 2023-03-08 16:48 GMT


Full View

சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் விடுதலை. இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனன் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நக்சல் படைக்கும் அதிகார வர்க்கத்துக்குமான பிரச்னையை படம் அழுத்தமாக பேசுகிறது. மேலும் இந்த படத்தில் சர்ச்சையாகக் கூடிய காட்சிகளும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜக போன்ற கட்சிகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது.

மக்கள் படை தலைவனாக பெருமாள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மனுசன் பொறக்குறப்போ ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைட்லனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லோரும் ஒன்னுன்னு போராட்ற நாங்க பிரிவினைவாதிகளா” என அவர் பேசியிருக்கும் வசனம் உண்மையை முகத்தில் அறைந்தார் போல இருக்கிறது.

காக்கிச்சட்டை போட்டு டிரைவராக வேலை செய்யும் சூரிக்கு இந்த வேட்டையில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்பது எண்ணம். அங்கு மக்கள் படை தலைவனை பிடிக்க போலீஸ் படையுடன் செல்கிறார் சூரி. ஆனால் அங்கு பல கட்ட அவமானங்களும் டீ , டிஃபன் வாங்கி வரச் சொல்லி அலைக்கழிக்கும் சில்லறை வேலைகளுமே அவருக்கு கிடைக்கின்றன. இதையும் தாண்டி அவர் எப்படி தன்னுடைய கதாநாயக பிம்பத்தை நமக்கு தருகிறார் என்பதை படத்தில் காணலாம்.  

Tags:    

Similar News