சன் டிவி சீரியலுக்கு மாறிய, 'செம்பருத்தி' ஷபானா

Shabana Sun TV New Serial - சன்டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ள, 'ஜோடி' என்ற புதிய சீரியலில் ரசிர்களை மகிழ்விக்க வருகிறார் 'செம்பருத்தி' புகழ் ஷபானா.

Update: 2022-10-10 07:57 GMT

Shabana Sun tv new serial-  ‘செம்பருத்தி’ புகழ் ஷபானா.

Shabana Sun TV New Serial -ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஷபானா. அந்த தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில், டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது, அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த சீரியலில் அவரது நடிப்பு, பலரையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, சீரியல் பார்க்க விரும்பாத பெண்கள் சிலரும் கூட, ஷபானாவின் அந்த 'செம்பருத்தி' கேரக்டருக்காக விரும்பி பார்த்தனர். அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பலரையும் தன்வசப்படுத்தி இருந்தார் ஷபானா.

'செம்பருத்தி' சீரியல் நடிகை ஷபானா நடிக்கும், சன் டிவி சீரியல் குறித்த 'அப்டேட்' தற்போது வெளியாகியுள்ளது.தமிழ் சீரியல்களின் இளவரசியாக வலம் வருபவர் ஷபனாவுக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இந்த சீரியல் நிறைவுபெற்றதை அடுத்து எந்த சீரியலில் ஷாபனா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.அதே சமயம் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக, தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

இந்நிலையில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள, சன் டிவியின் புதிய சீரியலில் ஷாபனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. சுலைமான் என்பவர் இந்த சீரியலை இயக்கவுள்ளார்.இந்த சீரியலில் நடிகர் பவன் ரவீந்திரா என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் பிசியாக நடித்து வருபவர். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், முதன்முறையாக தமிழ் சீரியல்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷபானா, 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால், ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. இதனால், மனக்கவலையில் இருந்தார் ஷபானா. திருமணம் செய்தும், அந்த மண வாழ்க்கையை முழுமையான, நிறைவான சந்தோஷத்துடன் எதிர்கொள்ள வாய்ப்பின்றி தவிக்கிறார் ஷபானா என்ற தகவல்கள், சமூக வலைதளங்களில் வைரலானது.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, 'செம்பருத்தி' சீரியல்  நிறைவடைந்த நிலையில், அடுத்து, ஷபானா என்ன சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். விரைவில் அதுபற்றிய தகவல்கள் வருமா என எதிர்பார்த்து இருந்தனர்.

தற்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில், 'ஜோடி' என்ற தொடரில்தான், ஷபானா நடிக்க இருக்கிறார். இந்த சீரியலின் துவக்கவிழா பூஜை, இன்று நடந்திருக்கிறது. இந்த பூஜை நடந்த புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, விஜய் டிவியில் அவரை ரசித்த ரசிகர்கள், இனி தினமும் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, 'ஜோடி' சீரியலில் பார்க்கலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News