தி லெஜெண்ட் சினிமா எப்படி இருக்கு..? வாங்க பார்க்கலாம்..!

Legend Saravanan Movie தி லெஜெண்ட் சினிமா எப்படி எடுக்கப்பட்டிருக்கு? சரவணன் நடிப்பு எப்படி? போன்றவை இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-29 06:59 GMT

legend saravanan movie-தி லெஜெண்ட் 

Legend Saravanan Movie-ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'தி லெஜண்ட்'. இதற்கு முன் ஜேடி-ஜெர்ரி உல்லாசம் மற்றும் விசில் போன்ற படங்களை இயக்கியவர். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்கள் மூலம் கண்களுக்கு விருந்து படைத்த லெஜண்ட் சரவணனுக்கு திரையில் நடிக்க ஆசை வந்தது. ஆசை வந்துவிட்டால் சாதித்துக்காட்டுவதே சரவணன் பாணி. உடனே ஜேடி- ஜெர்ரியுடன் கூட்டணி போட்டார்.


சரவணன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் தி லெஜண்ட். அந்த படம் எப்படி இருக்கிறது? கதை என்ன என்று பார்ப்போமா..வாங்க..!

வெளிநாட்டில் மிகப் பெரிய விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், தன் சொந்த மக்களுக்கு பயன்படும் வகையில் உழைப்பதற்காக தமிழ்நாடு திரும்புகிறார். தமிழ்நாட்டில் தன் பால்ய நண்பன் ரோபோ சங்கரை சந்திக்கிறார். அப்போது ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் எல்லோருக்கும் சர்க்கரை நோய் இருப்பது சரவணாவுக்கு தெரியவருகிறது.


ரோபோ சங்கரின் குழந்தைகள் கூட பிறவியிலேயே சர்க்கரை நோயுடன் பிறந்து அவதிப்படுவது சரவணன் மனதைக்குடைகிறது. ஒருநாள் ரோபோ சங்கர் திடீரென சர்க்கரை நோய் அதிகமாகி மரணம் அடைகிறார். அதிர்ச்சியடைந்த விஞ்ஞானி லெஜண்ட் சரவணன் சர்க்கரை நோய் முழுவதுமாக குணமாக மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்குகிறார்.

இப்போது உங்களுக்கும் தெரிந்து இருக்கும். வழக்கமான சினிமாக்களில் வருவதுபோல சரவணனுக்கும் எதிரிகளால் பல்வேறு அச்சுறுத்தல்கள் வருகிறது. அந்த தடைகளை தகர்த்து எறிந்து சக்கரை நோய்க்கு அவர் மருந்து கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பதுதான் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருக்கிறார். படமும் பார்ப்பதற்கு பிரம்மாண்டமான, தரமான படமாக இருப்பது காட்சி அமைப்புகளில் தெரிகிறது. பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படம்போல ரிச் மேக்கிங்கில் படம் உருவாகியுள்ளது.

legend saravanan movie-அதேபோல் குறிப்பாக மெடிக்கல் மாஃபியா, ஜுவனெய்ல் டயபெட்டிக்ஸ் போன்ற சமூகத்துக்கு தேவையான மிக முக்கியமான விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தி எடுத்தியிருப்பது சிறப்புக்குரியது. திரைக்கதையில் ஆங்காங்கு சில சொதப்பல்கள் தெரிவதால் சலிப்பு ஏற்படுகிறது. படமும் நீளமாக இருப்பதால் மேலும் சலிப்பை ஏற்படுத்துகிறது. லெஜண்ட் சரவணன் செனில் வரும்போதெல்லாம் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. அவரும் பார்ப்பவர்களுக்கு கலர்ஃபுல் விருந்து படைத்துள்ளார்.

முதலில் இந்த வயதிலும் சினிமா மேல் காதல்கொண்டு கதை தேர்விலும் கவனம் செலுத்தியிருப்பதில் சரவணனுக்கு பாராட்டுக்கள். லெஜண்ட் சரவணன் நடிப்பு, நடனம், ஆக்க்ஷன் என படம் முழுவதும் ஆக்கிரமித்து பயணித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடி முதல் பாதியில் கீத்திகாவும், இரண்டாம் பாதியில் ஊர்வசி ரெளடெலா ஆகியோர் நடித்துள்ளனர். ஏதோ அவர்களும் வந்தார்கள் போனார்கள். அவ்வளவுதான். சொல்லும்படியாக அவர்கள் நடிப்பில் ஒன்றும் இல்லை. பிரம்மாண்ட படம் என்று கூறுவது உண்மை. ஏனெனில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி படம் இது என்பது கூடுதல் கவனம் பெறுகிறது. அவருக்கு தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக நடித்து மறைந்தாலும் பேர் வாங்கியுள்ளார்,விவேக். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கர் அவரது தனித்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் மயில்சாமி, விஜயகுமார், லதா, சச்சு, முனீஸ்காந்த், யோகிபாபு, தம்பி ராமையா, ஹரிஷ் பெரோடி, நாசர், லிவிங்ஸ்டன், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அமுதவானன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.


ஹாரிஸ் ஜெயராஜ் இசை. மோசலே மோசலு ஹிட் பாட்டு. பின்னணி இசை நன்றாக உள்ளது. வழக்கம் போலவே அவரது இசை ஆங்காங்கே படம் முழுவதும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு. தேவையானதை செய்திருக்கிறார். ஒளிப்பதிவு கலர்ஃபுல் விருந்து.

படத்தின் பிளஸ் லெஜண்ட் சரவணன் முதல் படம், ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜேடி - ஜெர்ரி கூட்டணி போன்றவை. மைனஸ் சில இடங்களில் திரைக்கதை சொதப்பல், நீண்ட படம்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திருப்தி ரகம் என்று மட்டுமே சொல்ல முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News