இனிமே தான் பாக்கப்போறீங்க இந்த ஜனனியின் ஆட்டத்த!
Janani Bigg Boss 6 Tamil -என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது, என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது என வில்லித்தனமாக பஞ்ச் டயலாக் பேசும் ஜனனி;
Janani Bigg Boss 6 Tamil -விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. தற்போது நிகழ்ச்சியில் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டாம் வாரத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கின்றனர்,
பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். சில சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து அதிகம் பாப்புலர் ஆனார். அவர் அதற்கு பிறகு ஹீரோயினாக தற்போது தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.
தற்போதைய பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அவர் ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிக் பாஸ் சீசனில் ஜனனி ஆர்மி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வீடு சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ரணகளமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் செருப்பை எடுத்து காட்டுவது முதல் ஆக்ரோஷமாக சண்டையிடுவது வரை போட்டியாளர்கள் படு பயங்கரமாக களத்தில் குதித்துள்ளனர்.
அந்த வகையில் இன்று பிக் பாஸ் வீட்டில் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் தங்கள் கைகளுக்கு கிடைக்கும் பொம்மையை எடுத்துச் சென்று ஓர் இடத்தில் வைக்க வேண்டும். அதில் யாருடைய பெயர் கொண்ட பொம்மை இலக்கை அடையவில்லையோ அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப் படுவார்கள் என்பது விதி.
இதனால் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஆர்வத்துடன் விளையாடினர். அதில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு ட்ரைலர் போல உள்ளது.
பொம்மை டாஸ்க்கில் ஜனனி பெயர் கொண்ட பொம்மை செரினாவுக்கு கிடைக்கிறது. ஆனால் அவர் அந்த பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடாமல் அமைதியாக ஒரே இடத்தில் நிற்கிறார். இதனால் ஜனனி அந்த போட்டியிலிருந்து நீக்கப்படுவதாக பிக் பாஸ் அறிவிக்கிறார்.
இதைப் பார்க்கும்போது செரினா வேண்டுமென்றே பொம்மையை கொண்டு போய் வைக்காமல் இருப்பது போல தெரிகிறது. இதனால் வருத்தம் அடைந்த ஜனனி வில்லி போல டயலாக் பேசியுள்ளார்.
என்னுடன் நல்லா பழகினால் நான் எல்லாருக்கும் நல்லவள். ஆனால் என் முதுகில் குத்தி வலிக்கும்படி செய்தால் என்னைப் போன்ற கெட்டவள் யாரும் இருக்க முடியாது. என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது, என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது என வில்லித்தனமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிகிறது.
இதை பார்த்த ஜனனி ஆர்மி ரசிகர்கள், இனி ஜனனியின் ஆட்டம் ஆரம்பம் என்று கூறி வருகின்றனர்.
அந்த வகையில் இனி வரும் வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளிவரும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல கஷ்டமான டாஸ்க்கள் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2