இந்தி 'கைதி'யில் நடிக்கும் அமலா பால்
Amala Paul New Movie- 'கைதி' படத்தின் இந்தி ரீமேக் 'போலா' படத்தை, அஜய் தேவ்கன் நடித்து இயக்கவும் செய்கிறார். இப்படத்தில், அமலாபால் நடிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.;
amala paul new movie-அஜய்தேவ்கன் இயக்கி நடிக்கும் இந்தி ‘கைதி’ படத்தில், அமலாபால் நடிக்கிறார்.
Amala Paul New Movie- தென்னிந்தியாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால் தற்போது முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். 'கைதி' படத்தின் இந்தி ரீமேக்கில் அமலா பால் இடம்பெறுவதாக, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த 'கைதி' திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ம் ஆண்டு அக்டோபரில் வெளியான 'கைதி' திரைப்படம், அதே நாளில் வெளியான விஜய் நடித்த 'பிகில்' படத்துடன் மோதியது.
வலுவான திரைக்கதை, கார்த்தி மற்றும் படத்தில் இடம் பெற்ற சக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு உள்ளிட்டவற்றால் பிகில் படத்திற்கு இணையான வரவேற்பு 'கைதி' படத்துக்கும் கிடைத்தது. தற்போது இந்த படத்தை, மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் 'கைதி' இந்தியில் 'போலா' என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நடிக்கிறார். அவருடன் தபு படத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அமலா பாலும் முக்கிய கேரக்டரில் இடம்பெறுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிப்பில் வித்யாசங்கள் காட்டும் ஆர்வம் கொண்டவர் அமலாபால். அவர் நடிப்பில் வெளியான 'ஆடை' படம், அத்தகைய வரவேற்பை பெற்ற சிறந்த படம். அதில், நிர்வாணமாக சில காட்சிகளில் அமலாபால், நடித்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. படம் முழுக்க இவரே நிறைந்திருப்பார். சவாலான ஒரு பெண் கேரக்டர். 'அம்மா கணக்கு' படத்தில், ஒரே வகுப்பறையில் அம்மாவும், பெண்ணும் கல்வி கற்கும்படியான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் அமலாபால்.
'கைதி' படத்தின் ரீமேக்காக 'போலா' அமைந்தாலும் இந்தி களத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹீரோ அஜய் தேவ்கனே இயக்குகிறார். முதலில் இந்த படத்தை தர்மேந்திர ஷர்மா இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக அஜய் தேவ்கன் இயக்கிய ரன்வே 34 படம் வெற்றி பெற்றதால், 'கைதி' ரீமேக்கை அவரே கையில் எடுத்துள்ளார்.
'போலா' படத்தை அஜய் தேவ்கன், டி சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தென்னிந்தியாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அமலா பால், தற்போது முதன் முறையாக இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். அமலா பால் நடிப்பில் 'டீச்சர்', 'கிறிஸ்டோபர்', 'திவிஜா' படங்கள் மலையாளத்தில் உருவாகி வருகின்றன. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வைவல்' ஜானர் மலையாள படமான 'ஆடுஜீவிதம்' படத்திலும் அமலா பால் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2