இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை பூஜிதா

Actress Poojitha - இசையமைப்பாளர் பற்றிய வதந்திக்கு நடிகை பூஜிதா பொன்னாடா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Update: 2022-09-06 06:25 GMT

நடிகை பூஜிதா பொன்னாடா.

Actress Poojitha -தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளார். இவரது  இசையில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும், தற்போது சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். 43 வயதாகும் தேவி ஸ்ரீ பிரசாத் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னாடா என்பவரை ரசியமாக திருமணம் செய்துகொண்டதாக கூறி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் நடிகை பூஜிதா பொன்னாடா.

devi sri prasad marriage, devi sri prasad latest newsஇது குறித்து நடிகை பூஜிதா கூறுகையில்  நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக கூறி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இப்படிப்பட்ட தவறான தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை  என தனது கருத்தை ஆழமாக பதிவிட்டு உள்ளார். இதன்முலம் இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News