2023 pongal release tamil movies-2023 பொங்கலுக்கு மோதும் அஜித்,விஜய்..?

Pongal Release Tamil Movies 2023-2014ம் ஆண்டுக்குப் பின்னர் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் படங்கள் 2023 பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தெரிகிறது. இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.

Update: 2022-10-15 08:39 GMT

2023 pongal release tamil movies-நடிகர்கள் விஜய்,அஜித் (கோப்பு படம்)

Pongal Release Tamil Movies 2023-அஜித்தின் 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில், அஜித் துப்பாக்கியுடன் புதிய தோற்றத்தில் காணப்பட்டார். இருப்பினும், போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் அஜித்தின் 'துணிவு' படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று பகிர்ந்துள்ளார். மேலும் அவரது அந்த ட்வீட் ரசிகர்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில்,  அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டியாளர்களாகவே இருக்கின்றனர். மேலும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் நடிகர் அஜித்தின் 'துணிவு' மற்றும் நடிகர் விஜய்-ன் 'வாரிசு' உடன் மோதவுள்ளது. விஜய்யின் 'வாரிசு' படமும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வாரிசு படமும் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது.


எனவே, ஆர்.கே.சுரேஷின் ட்வீட்டிற்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாற்றி மாற்றி தங்கள் எதிரிகளை ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.

2023 pongal release tamil movies

நடிகர் விஜய்யும் அஜீத்தும் இதுவரை எட்டு முறை பாக்ஸ் ஆபீஸில் மோதியுள்ளனர். அதே சமயம் இவ்வாறு ரிலீசான படங்களில் விஜய் படங்கள் அதிக,வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக 2014 பொங்கல் சமயத்தில் 'வீரம்' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன.

எனவே, 2023 பொங்கலுக்கு 'துணிவு' ரிலீஸ் ஆனால், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ஸ் ஆபீஸில் இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்படும்.ஆனால், அஜித்தின் 'துணிவு' படம் திருட்டு திரில்லர் என்றும், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், விஜய்யின் 'வாரிசு' ஒரு உணர்ச்சிப் பூர்வமான குடும்பதிரைக்கதையாக இருக்கும் என்கிறார்கள். மேலும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே விஜய்-ன் வாரிசு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.


pongal release tamil movies 2023

2014ம் ஆண்டுக்குப் பிறகு, தளபதி விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் 2023 பொங்கலுக்கு மோத உள்ளன. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, விஜய் மற்றும் அஜித் கோலிவுட்டில் தங்களுக்கான தனி பாணியை உருவாக்கி ஸ்டார் அந்தஸ்த்தில் இருவரும் காலூன்றி உச்சத்திற்கு உயர்ந்தனர். இருவரும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும், திரையில் அவர்களின் போட்டி வெளிப்படையானது. அது வியாபாபார ரீதியில் ஆனது. மேலும் சமூக ஊடகங்கள் வளர்ச்சிபெற்ற நாளில் இருந்து, அவர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வார்த்தைகளால் மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News