6 வயதில் பள்ளிக்கூடம்: ரேங்கிங் கிடையாது- இது எங்கே என்பது தெரியுமா?
உலகிலேயே மகிழ்ச்சியான கல்வி முறை உள்ள ஒரு நாடு உண்டென்றால் அது பின்லாந்து நாடுதான். அந்த நாட்டில் ஆறு வயதில் பள்ளிக்கூடத்திற்கு சென்றால் போதும். ஏழு வயதில் தான் கல்வி முறையை ஆரம்பிக்கிறது.
பின்லாந்து நாட்டில் உள்ள கற்பித்தல் முறைகளில் ஒரு குழந்தை ஆறு வயதை எட்டிய உடனே பள்ளிக்கூடங்களில் கால் பதிக்கிறது. நமது ஊரைப் போல ப்ரீ ஸ்கூல்கள் அங்கு இருந்தாலும் அங்கு பெரும்பாலும் உணவு அருந்துவது எப்படி, சாலை விதிமுறைகள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை தேவைகள் கற்றுத் தரப்படுகின்றன. ஆறு வயதில் பள்ளிகளுக்குள் செல்லும் குழந்தைகளுக்கு உடனடியாக புத்தகத்தை கொடுத்து அடுத்த மூன்று மாதங்களில் பருவ தேர்வுகளை எழுத வைத்து பீதி ஏற்படுத்தாமல் ஏழு வயதை எட்டு முறை அவர்களுக்கு விளையாட்டும், கொண்டாட்டமுமாக சக மாணவர்களுடன் பழகுவதற்கும் பள்ளியின் நடைமுறைக்கு அவர்களை அழைத்து வருவதற்கும் போதிய அவகாசம் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஏழு வயதில் இருந்து இந்த குழந்தைகளுக்கு பாடங்கள் தொடங்கப்படுகிறது. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்த மதிப்பீடுகளும் கிடையாது. மிக முக்கியமாக 7 வயது முதல் 16 வயது வரை கட்டாய கல்வியும், கற்பித்தல் முழுவதும் பின்லாந்து நாட்டின் பீனிக்ஸ் மொழியிலேயே நடத்தப்படுகிறது. கடைசி இரண்டு வருடங்களில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பின்லாந்தில் 99 சதவீதம் பேர் ஆரம்ப கல்வி பெறுகின்றனர். இதற்கு காரணம் 13 வயது வரை எந்தவிதமான ரேங்கிங் முறைகளும் கிடையாது என்பது தான்.
மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் யாரும் ஏற்றத்தாழ்வு காண முடியாது. அப்படியே சில தேர்வுகள் வைக்கப்பட்டாலும்,அதில் அந்த மாணவர்களின் செயல்பாடு அவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படாது. ஒவ்வொருவரின் தனித்திறமையையும் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கவும் , பின்னடைவை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும் சிறப்பு திட்டங்கள் உள்ளது. மேலும் வீட்டு பாடங்களை மாணவர்களே தேர்ந்தெடுத்து செய்து வரலாம் பிரதான நகரங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வி அறிவும் கடைகோடி கிராமத்தில் படிக்கும் குழந்தையின் கல்வி அறிவும் சம அளவில் இருப்பதை பின்லாந்து கல்வி முறை உறுதி செய்கிறது.
கல்வியை போலவே இசை, நடனம், ஓவியம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் 94 சதவீதம் பேர் உயர் கல்விக்கு செல்கின்றனர். மாணவர்கள் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கற்பித்தல் முறை வெற்றியடைவதற்கு ஆசிரியர்களே காரணம் என்கிறார்கள் அந்த நாட்டு அறிஞர்கள். ஏனெனில் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் ஐந்து ஆண்டு உறைவிட பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். மேலும் வகுப்பறை பயிற்சி, ராணுவ பயிற்சி, அவசர கால பயிற்சி ,நாட்டின் அரசியலமைப்பு, குழந்தைகள் உரிமை குறித்த சட்டங்களை அந்த ஆசிரியர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இப்படி தேர்வாகும் ஆசிரியர்கள் நம்ம ஊர் ஐ.பி.எஸ். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையாக கருதப்படுகின்றனர்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த கல்வி கட்டமைப்பை உருவாக்கியதற்கு மிக முக்கிய காரணமும் உள்ளது. அதாவது கல்வி முறை முழுவதும் அரசின் கைவசம் இருப்பதும் முக்கிய பொறுப்புகளில் சிறந்த கல்வியாளர்கள் நியமிக்கப்படுவதும் காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் அந்நாட்டின் மொத்த ஜி.பி.டி.யில் 24 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே உலகிலேயே மகிழ்ச்சியான இருக்கும் குழந்தைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் பின்லாந்து குழந்தைகள் முன்னிலை பெறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu