/* */

பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களுக்கு அரசின் அவசர எச்சரிக்கை உத்தரவு

பிரான்ஸ் நாட்டில் போலி எஸ்எம்எஸ்மூலமாக பொதுமக்களின் தகவல்களை திருடும்கும்பல் அதிகரித்துள்ளது. இதனைக்கண்டறிந்த அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களுக்கு  அரசின் அவசர எச்சரிக்கை உத்தரவு
X

பிரான்ஸ் நாட்டு மக்கள் எஸ்எம்எஸ் குறித்து ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது (மாதிரிபடம்)

பிரான்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்கள் அனைவருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உலகில் என்னதான்தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதில் சாதக பாதக அம்சங்கள் அதிகம் உள்ளன. ஒரு சிலர் இதனை தேவையானதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு சிலரோ இதனையே தொழிலாக வைத்து ஹேக் செய்வது, ஏமாற்றுவது என்றே தொழிலாக உள்ளனர். இது இங்கு மட்டுமல்ல .. வெளிநாடுகளிலும் இதுபோன்ற ஆட்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் அந்நாட்டு அரசானது செல்போனில் வரும் எஸ்எம்எஸ் குறித்து உஷாராக இருக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த எஸ்எம்எஸ் சில் பொதுமக்களுக்கு ஒரு பார்சல் அனுப்பப்படுவதாகவும் அதில் உள்ள பட்டனைஅழுத்தவும் என எஸ்எம்எஸ் வருவதால் அனைவருமே உஷாராக இருக்கவேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அந்த எஸ்எம்எஸ்சில் ஒரு லிங்க் அனுப்பப்படுவதாகவும் அந்த லிங்கை அழுத்தினால் ஒரு ஆஃப் கிரியேட் ஆவதாகவும் அதில் இருந்து பொதுமக்களைப்பற்றிய தகவல்கள் திருடப்படுவதாகவும் அந்நாட்டு அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்களிடம் ஆஃப் தரவிறக்கவும், ஐபோன் வைத்திருப்பவர்களிடம் ஆப்பிள் ஐடி விபரங்கள் குறித்து அது கோருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எஸ்எம்எஸ்கள் வந்தால் பொதுமக்கள் உடனடியாக அழித்துவிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எந்த தகவல்களையும் யாருடனும் பகிரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை பிரான்சில் இரண்டு லட்சம் எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் இன்டர் நெட் திருட்டுகளை கண்காணிக்கும் நிறுவனம்தான் இதனை கண்டறிந்து அரசுக்கு தெரிவித்துள்ளது. இது சீன ஹேக்கர்களால் அனுப்பப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மோசடிகளினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும் வயதானவர்கள் என்பதால் வீட்டிலுள்ளவர்கள் இவர்களையும் கண்காணிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது

Updated On: 8 Aug 2022 4:20 AM GMT

Related News