டியூசன் சென்ற சிறுவர்கள் மாயம் - சேலத்தில் மீட்பு

டியூசன் சென்ற சிறுவர்கள் மாயம் - சேலத்தில் மீட்பு
X
டியூசன் செல்வதாக கூறிவிட்டு,சேலத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

டியூசன் சென்ற சிறுவர்கள் மாயம் - சேலத்தில் மீட்பு

சேலம் மாவட்டத்தில் அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக இரவு 8:00 மணியளவில், இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரியான ஏட்டு கீதா அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தங்கள் பெற்றோரிடம் டியூசன் செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி சேலத்திற்கு வந்திருந்தனர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக இந்த தகவல் குமாரபாளையம் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாணவர்களின் பெற்றோர் சேலத்திற்கு வந்து, அழகாபுரம் போலீசாரிடம் இருந்து தங்களுடைய குழந்தைகளை மீட்டுக்கொண்டனர். இப்படியான நேர்த்தியான நடவடிக்கையால் சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

Tags

Next Story