திருச்சி மாவட்டத்தில் 18 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு

திருச்சி மாவட்டத்தில்  18 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு
X
திருச்சி மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் முதல் நிலைத் தேர்வுகள் திருச்சி மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் நடைபெற்றது.

இதில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வு எழுதினார்கள். தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு வெப்ப உடல் பரிசோதனை செய்யப்பட்டது. கைகளில் கிருமி நாசினி தெளித்து பின்னர் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, திருச்சி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடந்த தேர்வினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!