/* */

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் : மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணை செய்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் : மருத்துவக்கல்லூரி டீன் விசாரணை
X

தஞ்சாவூரில் குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு விவகாரம் தொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணை செய்தார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(34) விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.

இந்நிலையில் கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த 25ஆம் தேதி தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

குறை மாதத்தில் குழந்தை பிறந்தால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவ நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றுவதற்கு செவிலியர்களிடம் கணேசன் சென்றுள்ளார்.

அப்போது கையில் இருந்த பேண்டஞ்சை கைகள் மூலம் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது.

இந்த செய்தியை அறிந்த தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ரவிக்குமார் பாதிக்கப்பட்ட குழந்தையையும் அந்த தாயையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்பு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குழந்தையின் கட்ட விரல் துண்டிக்கப்பட்ட விஷயத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

குழந்தையின் விரல் இன்னும் மூன்று நாட்களில் ஒன்று சேர்ந்து விடும் அதற்கு பின்பு தான் குழந்தையை பற்றி முழு விவரம் தெரியவரும் என தெரிவித்தார்.


Updated On: 8 Jun 2021 8:45 AM GMT

Related News