/* */

கல்லணையில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு சீரமைக்கும் பணிகள் தீவிரம்

கல்லணையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக மதகுகள் மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கல்லணையில்  50 ஆண்டுகளுக்குப்பிறகு சீரமைக்கும்  பணிகள் தீவிரம்
X

கல்லணையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக மதகுகள் மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கல்லணையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக மதகுகள் மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாசனத்திற்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறந்துவிடப்படும், இதனால் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் ஜீன் 12 ஆம் தேதிக்கு முன்னேரே தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை திறந்தவுடன் தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு நான்கு முதல் ஐந்து நாட்களில் வந்து சேரும்.

இதற்காக கல்லணை தற்போது புனரமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நீர்ப்பாசன கட்டமைப்பை நீட்டித்தல், புனரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூபாய் 122 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, மூன்றாண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் இப்பணிகளில் கடந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள அணைகள் பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட 30 இரும்பு ஷட்டர்களும் புதிதாக அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்லனைக்கு கீழ். 280 அடி நீளத்தில் சைபன் (siphon) மறு கட்டுமானம் செய்யப்படுகிறது. இந்த சைபன் கல்லணை கால்வாய், வெண்ணாறு ஆகிய ஆறுகளுக்கு கீழே சென்று பின்னர் காவிரியில் கலக்கிறது .

மொத்தம் 122 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் பணிகளில் இந்த ஆண்டு 20 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைப்போல் ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் தற்பொழுது கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஷட்டர்கள் சீரமைக்கும் பணியும், மதகுகள் சரிபார்க்கும் பணியும், வர்ணம் பூசும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Updated On: 20 May 2022 2:30 PM GMT

Related News