/* */

பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

HIGHLIGHTS

பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
X

பொட்டல்புதூர் சாலையில் கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, பாபநாசம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் இருந்து - அம்பை செல்லும் சாலையில் ராட்சத மரக்கிளை ஒன்று கனமழைக்கு முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. அலுவலக மற்றும் பள்ளி நேரம் என்பதால் போக்குவரத்து அதிகமாக இருந்தது. தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் சம்பவ இடத்திற்கு சென்றார்.

மேலும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரக்கிளை அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

Updated On: 29 Oct 2021 4:53 AM GMT

Related News