/* */

தென்காசி மாவட்டத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றுக்கொண்டார்

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!
X

படவிளக்கம்: தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பொறுப்பேற்று கொண்டபோது எடுத்த படம்.

தென்காசி மாவட்ட முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணராஜ் பணியாற்றினார். பின்னர் சாம்சன் நியமிக்கப்பட்டார். அவர் வேறு பணிக்கு மாறுதலாகி சென்று விட்டார். தற்போது தென்காசி மாவட்ட காவல் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பேட்டியளித்தார்.

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டார்.

புதிய காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் இன்று காலை முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான குற்றாலம், பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியின் போது அவர் கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதால் அவர்கள் கண்காணிப் படுவார்கள்.

மேலும் மாவட்டத்தில் போதை பொருட்களான கஞ்சா, குட்கா போன்ற பொருட்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்களை ஒழிக்கின்ற வகையில் காவல்துறையினர் பள்ளி கல்வித் துறையினருடன் இணைந்து பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே நெல்லை துணை கமிஷனர் திருவாரூர் மாவட்ட எஸ்பி ஆகவும் பணியாற்றினார்.

Updated On: 18 Oct 2023 11:45 AM GMT

Related News