/* */

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தென்காசி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம், பில்டர்ஸ் அசோசியேசன், தென்காசி டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, தென்காசி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கடந்த ஆறு மாத காலமாக கட்டுமானத் துறைக்கு அத்தியாவசியப் பொருட்களான சிமெண்ட், கம்பி, உள்ளிட்ட பொருட்கள் முறையற்ற வகையில் விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மற்ற துறைகளுக்கு வாரியம் இருப்பதுபோல், கட்டுமானத் துறைக்கு வாரியம் அமைக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை விலை நிர்ணயம் அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கட்டுமான பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 11:00 AM GMT

Related News