/* */

கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் பிரதிநிதிகள்

Collector Petition -பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் பிரதிநிதிகள்
X

மாவட்ட ஆட்சியர் ஆகாசிடம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Collector Petition -தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கோரிக்கை மனுக்களை வழங்கினார்.

அவர்களின் முக்கிய கோரிக்கைகள்:

* கருப்பாந்தி அணை மற்றும் பாப்பன் கால்வாய் கால்வாய் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

* ஆர் நவநீத கிருஷ்ணபுரம் தீவு அலுவலகம் அமைத்தல்.

* .கீழக்கலங்கல் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் வழங்குதல்.

* .பொது பயன்பாட்டிற்கு நீர்ப்பிடிப்பு பகுதியை வழங்குதல்.

* ஊத்துமலை ஊராட்சியில் புதிய வாட்டர்டாங் வழங்குதல்.

* ஆலங்குளம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 16 ஊர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடை வழங்குதல் சம்பந்தமான கோரிக்கை மனு.

* வ.உ.சிதம்பரனாருக்கு திருவுருவச் சிலை எழுப்புதல் சம்பந்தமான கோரிக்கை மனு.

* தென்காசி மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத்தலங்களில் ஒன்று குற்றாலம் ஆகும். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம், குளிக்க அனுமதியில்லாத வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகா தேவி அருவி மற்றும் தேனருவி ஆகிய அருவிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்த காலகட்டங்களில், இங்கு உள்ள அருவிகளில் குளிக்க தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இப்பகுதியில் பொருளாதாரம் மேம்பாடு அடையும். அதேபோல் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஐயப்பன் சீசன் நடைபெறும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து புனித நீராடி, இங்குள்ள கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு மழை காலங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தண்ணீர், வீணாக கடலில் கலக்கின்றது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் பலமுறை குற்றச்சாட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, குற்றாலம் செண்பகா தேவி அருவிக்கு மேல் அணை கட்டுவது சம்பந்தமாகவும் மனு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணை கட்டும் பட்சத்தில், இங்கு ஆண்டுதோறும் அருவிகளில் தண்ணீர் விழும். மழைக்காலங்களில் அருவிகளில் வெள்ளம் பெருகினாலும், வீணாக அது கடலில் கலக்காமல், விவசாய நிலங்களை சென்று சேரும். விளைச்சல் அமோகமாக பெருகும். இதனால் இப்போது மக்களின் பொருளாதாரமும் மேம்பாடு அடையும் எனவும் மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 Oct 2022 9:47 AM GMT

Related News