/* */

வடகிழக்கு பருவமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

வடகிழக்கு பருவமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை எதிரொலி: குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
X

மெயின் அருவில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை கடந்து தண்ணீர் கொட்டுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று அதிகாலை 2.30 மணி முதல் 5 மணி வரை தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது.

Updated On: 30 Oct 2021 4:27 AM GMT

Related News