/* */

தென்காசி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து நடவடிக்கை: காவல்துறையினர் அதிரடி

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) - அதிரடி நடவடிக்கை.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து (Storming Operation) - அதிரடி நடவடிக்கை

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனை, தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என்றும், மேலும் குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், பழைய ரவுடிகளை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு தீவிர ரோந்துப் பணிகளை (Storming Operation) மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டும், வாகன சோதனையில் 796 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 73 குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலங்குளம் உட்கோட்டத்தில் பொதுமக்களை மிரட்டும் விதமாக கத்தியுடன் சுற்றி திரிந்த இரண்டு குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். HS குற்றவாளிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிறப்பாக ரோந்து பணி மேற்கொண்ட காவல் துறையினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது பாராட்டுகளை தெரிவித்தார்

Updated On: 25 Sep 2021 5:45 AM GMT

Related News