/* */

சதுரங்கத்தில் சாதித்த சிங்கங்கள்: பரிசு வழங்கிய தென்காசி எம்எல்ஏ

சதுரங்கப் போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு , தென்காசி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

HIGHLIGHTS

சதுரங்கத்தில் சாதித்த சிங்கங்கள்: பரிசு வழங்கிய தென்காசி எம்எல்ஏ
X

சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தென்காசியில், மும்பை இந்திய பேனா நண்பர் பேரவையின் இணை அமைப்பான ஐபிஎல் செஸ் அகாடமி சார்பில், 2021-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. தென்காசி எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியை, பள்ளியின் தாளாளர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.

போட்டியில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து 200 வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகள் 9,11,13 வயது மற்றும் பொது பிரிவு என 4 பிரிவுகளில், ஆறு சுற்றுகளாக நடைபெற்றன. நடுவர்களாக இசக்கி, மாரிமுத்து, மணிகண்டன், ராபர்ட் ஸ்டோனி, தமிழ்ச்செல்வி செயல்பட்டனர்.

இதில், 9 வயது பிரிவில் தூத்துக்குடி சாய்ஸ்ரீசரண், 11 வயது பிரிவில் புதுக்கோட்டை சந்தோஷ்குமார், 13 வயது பிரிவில் தூத்துக்குடி ஜோயல், பொதுப்பிரிவில் ரஞ்சித் ஆனந்த் ஆகியோர் ஐபிஎல் சாம்பியானாக வெற்றி பெற்றனர். சாம்பியனாக வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாடு பொதிகை சதுரங்க கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் 7, 9, 11, 13, 15 ஆகிய வயது பிரிவு மாணவ மாணவிகளுக்கு, தனித்தனியாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தெட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். எம்.கே.வி கே.பள்ளி முதல்வர் ஜேசுபாலின், மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழக துணைத்தலைவர் சரவணன், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் வைகை ஆர்.குமார் முன்னிலை வகித்தனர். ஐபிஎல் செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன் வரவேற்றார்.

இதில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் ஆனந்த பவன் காதர்மைதீன், காஜாமைதீன், சித்திக், சந்தோஷ், அருணோதயம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஐபிஎல் அகாடமி இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.

Updated On: 13 Dec 2021 1:15 AM GMT

Related News