/* */

2024 தேர்தலில் பாஜக தனித்து நின்று கூடுதல் ஓட்டு வாங்கட்டும்... சீமான் பேட்டி

பாஜகவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்று தான் என்றார் சீமான்

HIGHLIGHTS

2024 தேர்தலில்  பாஜக தனித்து நின்று  கூடுதல் ஓட்டு வாங்கட்டும்...  சீமான் பேட்டி
X

சிவகங்கையில் பேசிய சீமான்(தலைமை ஒருங்கினைப்பாளர் நாம் தமிழர்கட்சி)

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்று போட்டியிட்டு நாம் தமிழர் கட்சியைவிட ஒரு ஓட்டு கூடுதலாக வாங்கினால் அதனை பெரிய கட்சி என ஏற்றுக்கொள்வதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கை நேருபஜாரில் உள்ள தனியார் மஹாலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் அதன் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.



இதில், பங்கேற்ற சீமான் செய்தியாளர்களிடன் மேலும் கூறியதாவது: மூன்றாவது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? .நீட் தேர்வு குறித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறிய கருத்துக்கு, நீட் தேர்வில் வென்றவர்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நீட் தேர்வில் வென்றவர்களுக்கு தனியார் கல்லூரியில் பணம் வசூல் செய்யாமலா சீட் வழங்குகிறார்கள்.

பாஜகவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்று தான். இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பா.ஜ.க குறித்து கூறிய கருத்துக்கு, தனித்து நின்று போட்டியிட்டு நிம்மதியை தேடிய அதிமுக 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த நிம்மதியை தேடியிருக்கலாமே.

பா.ஜ.க 2024 தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுமா? நாம் தமிழர் கட்சியை விட பாஜக தனித்து நின்று ஒரு ஓட்டு வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் பெரிய கட்சி என ஏற்றுக்கொள்கிறேன். மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்துவிடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டுவரவேண்டும்.என்றார் சீமான்.


Updated On: 7 Feb 2022 1:31 PM GMT

Related News