இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு: 2 பேர் கைது

சேலம் : சேலம் வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடாசலம். இவர் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த டூவீலரை அதன் உரிமையாளர் எடுக்கும்படி ஒலிபெருக்கியில் கூறியிருந்தார்.
யாரும் எடுக்காததால் டூவீலரை வெங்கடாசலம் அப்புறப்படுத்த முயன்றார். அப்போது வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தியபோது சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் ( 31), மேட்டூரை சேர்ந்த பழனிசாமியின் மகன் சதீஷ் (24) என்பது தெரியவந்தது. அப்போது அவர்களிடம் அவர் நீண்ட நேரமாக ஒலிபெருக்கியில் கூறியிருந்தார். ஆனால் மோட்டார் சைக்கிளை எடுக்காமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்தின் சட்டையைப் பிடித்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து வெங்கடாசலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரசு பணியில் இருந்தவரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சதீஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu