சேலம் :நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் கரட்டில் திடீரென தீ..போலீஸார் விசாரணை

சேலம் :நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் கரட்டில்  திடீரென தீ..போலீஸார் விசாரணை
X
சேலம் நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் கரட்டில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

சேலம் : நெத்திமேடு கரிய பெருமாள் கோவில் கரட்டில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. முதலில் குறுகிய இடத்தில் பரவிய தீயானது காற்றின் வேகம் அதிகரித்ததால் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் மலையை ஒட்டிய பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் இருந்த அரிய மரங்களும், செடி, கொடிகளும் தீயில் எரிந்து சேதமாகின.தற்போது கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயில் சுட்டெரித்து வருகிறது.

பகல் நேரத்தில் விஷமிகள் சிலர் அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story