சேலம் : புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
![சேலம் : புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் சேலம் : புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்](https://www.nativenews.in/h-upload/2025/02/15/1977427-qew.webp)
சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில், 149 கால்நடை மருந்தகங்களும், 7 கால்நடை மருத்துவமனைகளும், ஒரு கால்நடை பன்முக மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி, கிடாரி கன்றுகளுக்கு கன்றுவீச்சு நோய் தடுப்பூசி, மாடுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி உள்ளிட்டவை கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் சிறப்பு முகாம்
அந்த வகையில், சேலம் மாவட்டம், புத்தூா் அக்ரஹாரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஒன்றிணைந்து நடத்தும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
கால்நடைகளுக்கான சிகிச்சைகள்
இந்த முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கரூவூட்டல், சினை ஆய்வு, சினை பருவ ஒருங்கிணைப்பு, மலடு நீக்கம், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், சினையுறா மாடுகளுக்கு நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் ஆய்வு, புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கால்நடை நோய் புலனாய்வு
கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், சாணம், ரத்தம், சளி, பால் ஆகிய மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
செயற்கை முறை கருவூட்டல் & சினையுறா ஆய்வு
குறிப்பாக, தற்போதைய முகாமில் பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலும், சினையுறாத மாடுகளுக்கு சிறப்பு ஸ்கேன் பரிசோதனையும் செய்து உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
முகாமில் கலந்துகொண்டோா்
- மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா்
- வருவாய் அலுவலா், பொது மேலாளா் (ஆவின்) குமரேஸ்வரன்
- சேலம் கோட்டாட்சியா் அபிநயா
- கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.என்.பாரதி
- பிற அரசுத் துறை அலுவலா்கள்
- கால்நடை வளா்ப்போா்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu