சேலம் கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா ஆக.10 ந்தேதி உள்ளூர் விடுமுறை ;கலெக்டர்
Salem Kottai Mariamman-சேலம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் ஆடித்திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பூச்சாட்டுதலோடு துவங்கி தினந்தோறும் சிறப்பு பூஜைகள் , அபிஷேகம், ஆராதனை என சிறப்பாக நடந்து வருகிறது.இதனையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுளள்து.
இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட்10 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் நுாற்றி எண்பத்தெட்டின் கீழ்வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும்பொருட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும்சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டததிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu