சேலம் அணைமேடு ரயில்வே உயர்மட்ட மேம்பால பணிகளை விரைவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை
எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து மிகுந்து காணப்படும் அணைமேடு ரயில்வேகேட்.
railway overfly bridge work delay,people demand action
சேலம் மாநகரின் மையப்பகுதியான முள்ளுவாடிகேட், அணைமேடு ரயில்வே கேட் ஆகிய பகுதிகளில் நாள்தோறும் ரயில்வரும் நேரத்தில் ஏராளமான வாகனங்கள் காத்துக்கிடக்கும் நிலையே தொடர்கிறது. இதனால் இந்த இருபகுதிகளிலும் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப்பணிகளை விரைவுபடுத்தவேண்டும் என பாதிப்படைந்து வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
railway overfly bridge work delay,people demand action
உயர் மட்ட மேம்பாலபணிகளுக்காக கம்பி கட்டும் பணிகள் நடந்து பாதியில் நிற்கிறது தொடருமா?
railway overfly bridge work delay,people demand action
சேலம் ஜங்ஷனிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் ரயில் சேலம் மாநகரின் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வந்துதான் செல்லும். அதேபோல் இரண்டு பாசஞ்சர் ரயில்களும் இவ்வழியே தான் செல்கின்றன. இந்த ரயில்கள் வரும் நேரத்தில் முள்ளுவாடிகேட், மற்றும் அணைமேடு, பொன்னம்மாபேட்டை, தில்லைநகர் பகுதியிலுள்ள ரயில்வே கேட்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.
முள்ளுவாடி கேட், பகுதி முன்பு இருபுறம் சென்று வந்த நிலையில் ஒரு பகுதியில் உயர்மட்டமேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதால் ஒரே கேட்டில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் நாள்தோறும் அங்கு போக்குவரத்து நெருக்கடி என்பது நிரந்தரமாக ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அரூர், பேளூர், ஆத்துார்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், பாண்டிச்சேரி, திருப்பதி, திருப்பத்துார் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணைமேடு ரயில்வே கேட் வழியாகத்தான் புதிய பஸ்ஸ்டாண்டிற்கு செல்லவேண்டும் .அந்தந்த ஊர்களுக்கு செல்லவும் இந்த வழிப்பாதைதான். மேலும் காலை மாலை என இரு வேளைகளிலும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார்கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள், அவர்கள் செல்லும் ஆட்டோக்கள் என எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் ரயில்வே கேட் பகுதியாக அணைமேடு ரயில்வே கேட் இருந்துவருகிறது.
railway overfly bridge work delay,people demand action
அணைமேடு பகுதியில் தனியாக நிற்கும் பில்லர்கள்...இந்த வேலைகள் அனைத்துமே பாதி நிலையிலேயே உள்ளது. விரைபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
railway overfly bridge work delay,people demand action
காலை, மாலை போக்குவரத்து நெருக்கடி
அணைமேடு ரயில்வே கேட் பகுதி வழியே எந்த ரயில்கள் சென்றாலும் கேட் போடப்படுவதால் இப்பகுதியானது காலை மாலை என இல்லாமல் கூட்ஸ் சென்றாலும் போக்குவரத்து ஸ்தம்பித்துவருகிறது. புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அங்கு நாலா புறமும் கடந்த ஆட்சியில் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால் கடந்த பல வருஷங்களாக பொதுமக்கள் மாணவர்கள் ஆபீசுக்கு செல்வோர் என ஏராளமானோர் பாதிக்கப்படும் அணைமேடு ,முள்ளுவாடி ரயில்வே கேட் உயர்மட்டமேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் வேகம் இல்லை. இதனால் இப்பகுதியில் நிரந்தரமான போக்குவரத்து நெருக்கடி எப்போதும் நிலவி வருகிறது.
railway overfly bridge work delay,people demand action
அணைமேடு பகுதியில் கட்டப்பட்டு பாதி நிலையிலுள்ள உயர்மட்ட மேம்பாலம்
railway overfly bridge work delay,people demand action
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பாலம் கட்டுமானப்பணிகள் நடந்து வந்தாலும் அதனைத்துரிதப்படுத்தவேண்டும் எனபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பாலப்பணியால் பாதிக்கப்படும் கட்டிடதாரர்கள் கோர்ட்டில்வ ழக்கு தொடர்ந்ததால் சிறிது காலம் இப்பணிகள் பாதிப்படைந்தது. தற்போது அதற்கும் ஒப்புதல் பெற்ற நிலையில் ஏன் தாமதமாக பணிகள் நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.
தினந்தோறும் அணைமேடு ரயில்வே கேட் பகுதியில் நிற்கும் வாகனங்கள் கேட்டைத் திறந்த பிறகு போர்க்களத்தில் இருபுறமும் எதிரெதிராக நின்ற போர்வீரர்கள் தாக்கிக் கொள்வது போல் எதிரெதிரே சென்று நிலைகுலைகின்றனர். இது தொடர்கதையாகவே உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலப்பணிகளை விரைவு படுத்தி தினந்தோறும் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் விடை தேடித்தரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu