சேலத்தில் மார்ச் 5 ந்தேதி தேசிய சேவா சமிதியில் 22ம் ஆண்டு தன்வந்த்ரி மஹா ஹோம நிகழ்ச்சி

சேலத்தில் மார்ச் 5 ந்தேதி தேசிய சேவா சமிதியில்  22ம் ஆண்டு தன்வந்த்ரி மஹா ஹோம நிகழ்ச்சி
X

சேலம் தேசிய சேவா சமிதியில்  மார்ச் 5 ந்தேதி  தன்வந்த்ரி ஹோமம் நடக்கிறது 

22nd yr dhanvandhri maha homam,at salem சேலத்தில் மார்ச் 5 ந்தேதியன்று தன்வந்த்ரி மஹா ஹோம நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 21 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ஹோமம் இந்த ஆண்டும் சிறப்பாக நடக்க ஹோமக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

22nd yr dhanvandhri maha homam,at salem

சேலம் மாநகரில் கடந்த 21 ஆண்டுகளாக பதிவு பெற்ற ஸ்ரீதன்வந்த்ரி ஆஸ்ரம டிரஸ்ட் சார்பில் மஹாஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டும் டிரஸ்ட் சார்பில் 22 ம் ஆண்டு தன்வந்த்ரி மஹாஹோமம் நடத்தஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசுபகிருது வருடம் மாசி மாதம் 21 ம் நாள் மார்ச் 5 ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சேலம் மரவனேரி பிரதான சாலையிலுள்ள தேசிய சேவா சமிதி வளாகத்தில் காலை 6.30 மணி முதல் மதியம் 1மணி வரை நடக்கிறது. பூர்ணாஹீதி பகல் 12.30மணியளவில் நடக்கிறது.சைவ வைணவ ஆன்மீக ஸிரோலன்மணி ஸ்ரீமான் குணசேகர பட்டாச்சார்யா மற்றும் குழுவினர் பங்கேற்று ஹோமங்களை நடத்துகின்றனர்.

22nd yr dhanvandhri maha homam,at salem


22nd yr dhanvandhri maha homam,at salem

ஆரோக்யத்துக்கு நன்மையளிக்கும் ஸ்ரீதன்வந்த்ரி ஸ்வாமிகள் (கோப்பு படம்)

இந்நிகழ்வில் அனைவரும் சகல சௌபாக்கியங்களைப் பெற ஸ்ரீ கோமாதா பூஜையும், வினைகள் நீங்கி அனைத்து பலன்களையும் பெற ஸ்ரீமஹாகணபதி ஹோமம், சகல தோஷ நிவர்த்திக்கு ஸ்ரீநவக்ரஹஹோமம்,நீண்ட ஆயுள்பெற ஸ்ரீஆயுள் ஹோமம், ஆயுள் அதிகரிக்க ஸ்ரீமிருத்யுஞ்சய ஹோமம், எதிரிகள் அகல ஸ்ரீ சுதர்சன ஹோமம், செல்வ வளம் பெற ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஹோமம், சகல வியாதிகளும் நீங்கி உடல் நலம் பெற ஸ்ரீதன்வந்த்ரி மஹாஹோமம் ஆகிய ஹோமங்கள் நடக்க உள்ளது.

பொதுநன்மைக்காக நடத்தப் பெறும் இந்த ஹோமத்திற்கு பொதுமக்கள் பல்வேறு வழிகளில் பங்கேற்று ஹோமத்தினைச் சிறப்பிக்கலாம். நிதி மிகுந்தோர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தோர் காசுகள் தாரீர், அதிலும் இயலாதோர் உழைப்பை நல்குவீர், அதுவும்இயலாதோர் இன்சொல் அருள்வீர், ஹோமத்திற்கு தேவையான பொருட்களைப் பொதுமக்கள் கொடுத்து உதவலாம். பசு நெய், சமித்து, புஷ்பம், பிரசாதம், 108 வகை மூலிகைகள் , பட்டு வஸ்திரம் ஆகியவைஆஹீதிக்காக தரலாம். ஹோமத்தில் ஆஹீதியிட பொருட்கள் விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். ஹோம முடிவில் பிரசாதம் வழங்குவதற்கு தேவையான பொருட்கள் தந்து உதவலாம். ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் மந்திரத்தை ,

’’ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரியே

அம்ருத கலச ஹஸ்தாய, ஸர்வாமாய,விநாசனாய,

த்ரைலோக்ய நாதாய,ஸ்ரீமஹாவிஷ்ணவே நமஹ’’

ஒரு லட்சத்து எட்டாயிரம் முறை எழுதி சமர்ப்பிக்க பலரை ஊக்குவிக்கலாம், நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அன்னதான மஹாபிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீதன்வந்த்ரி பகவான் மஹா ஹோம குழுவைச் சேர்ந்த ஸ்ரீபிருத்திவிராஜ், ஸ்ரீபிரவீன், ஸ்ரீசிவகாளிதாஸ், ஸ்ரீமுருகேசன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

22nd yr dhanvandhri maha homam,at salem


22nd yr dhanvandhri maha homam,at salem

ஹோமம் செய்வது ஏன்?

இறைவன் கருணையினாலேயே இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. இறைவனை உணர்தலே வாழ்க்கையின் சாரம் ’’அவனருளாலே அவள் தாள் வணங்கி’’ என்பது ஆன்றோர் கூற்று.

நம் பாரத நாடு ஆன்மீக நாடு. உலக நன்மைக்காகவே நமது ஒவ்வொரு செயலையும் அமைத்துவந்தனர் நம் பெரியவர்கள். அதன் ஒரு அங்கம் தான் ஹோமங்கள்.இக, பர நன்மை நாடிச் செய்கின்ற நற்கருமங்கள் முழுமை அடைவது ஹோமத்தினால்.

நமக்கும், நமது குடும்பத்தாருக்கும் , நமது சமுதாயத்திற்கும் நன்மையை வேண்டி இந்த ஹோமங்கள் செய்யப்படுகின்றன.நாம் மிக உயர்ந்ததாக கருதும் பொருட்களை அக்னியில் ஆஹீதி ஆக்குகிறோம். அதன்மூலம், மனதில் , உயர்ந்த , தியாகமான எண்ணங்கள் உதிக்கின்றன. அக்னியில் இட்டபொருள் அருள் வடிவம் பெற்று நம்மைக் காப்பதுடன் சூரியனிடம் செல்கிறது. சூரியன் அதனை மேகமாக்கி மழையாக பொழிகிறான். தாவரங்களையும், ஜீவராசிகளையும் போஷிக்கிறான். இவ்வாறு ஹோமத்தின் பயன் உலக நன்மைக்கு பயன்படுகிறது.

22nd yr dhanvandhri maha homam,at salem


22nd yr dhanvandhri maha homam,at salem

ஹோமங்கள் நம்மைக் காப்பாற்றிய வரலாறு: போபால் விஷவாயுக் கசிவின் போது நடந்தது. 1984 டிசம்பர் 3 ஆம் தேதி இந்தக் கொடுமையான சம்பவத்தில் விஷவாயுவினால் 2000 பேர் பலி ஆகினர். 3 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வெவ்வேறு வகையில் ஊனமுற்றார்கள். ஆனால் இந்த சமயத்தில் எஸ்.எல். குஷ்வாஹா என்ற ஆசிரியர் தனது வீட்டில் ஹோமம் செய்யத் தொடங்கினார். ஆச்சர்யம் , அந்த குடும்பம் காப்பாற்றப்பட்டது. 20 நிமிடங்களில் அவரது வீட்டிலிருந்த விஷவாயு மறைந்து போயிற்று. இந்த உண்மைச்சம்பவம் நமக்கு ஹோமத்தின் மகிமையை தெரிவிக்கிறது.

அக்னி பகவான் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் துாதுவனாக இருக்கிறார். முறையே அக்னியில் இடக்கூடிய பொருட்கள் மற்றும் நமது பிரார்த்தனைகளை முழுமையாக இறைவனிடத்தே கொண்டு சேர்க்கின்றார். ஆகவே அக்னியின் வாயிலாக செய்யக்கூடிய ஹோமங்களுக்கு பலன்கள் அதிகம்.

ஸ்ரீதன்வந்த்ரி ஹோமத்தின் பலன்கள்

இந்த பிரபஞ்சத்திலேயே முதல் மருத்துவர் ஸ்ரீதன்வந்த்ரி பகவானாவார். முதல் மருந்து அவர் கையிலிருக்கும் அமிர்தம் ஆகும். ஸ்ரீதன்வந்த்ரி பகவான் முப்பிணிகளையும் தீர்க்கவல்ல இறைவன். 1.உடல்நோய்,2. மனதளவில் ஏற்படக்கூடிய துன்பங்கள், கஷ்டங்கள், பூர்வ ஜென்ம கர்மாவால் வரக்கூடிய கஷ்டங்கள் மற்றும் நோய்கள்.

22nd yr dhanvandhri maha homam,at salem

22nd yr dhanvandhri maha homam,at salem

ஸ்ரீதன்வந்த்ரி பகவான் மஹாஹோமம்

சுஸ்ருத சம்ஹிதை, சூகசம்ஹிதை, அஷ்ட்டாங்க ஹ்ருதயம், போன்ற வழிகாட்டி நுால்கள் மூலம் பகவான் ஸ்ரீதன்வந்த்ரி , நாம் நோயிலிருந்து விடுபட வழியை செய்துள்ளார். முதுமை, நோய், இறப்பு, ஆகியவற்றை நீக்குபவர் பகவான் ஸ்ரீதன்வந்த்ரி பகவானின் மந்திரத்தை சிரத்தையோடு சொல்வதனால் நோயின் கடுமைகுறையும். உட்கொள்ளும் மருந்தின் வீரியம் அதிகரிக்கும். இந்த மூல மந்திரத்தை ஜபிக்க, ஜபிக்க, மூப்புஅணுகும்தன்மை நலிவுற்று நோய்கள் அகலும். பய உணர்ச்சி நீங்கும். ஏன் மரணமில்லாப் பெருவாழ்வே சித்திக்கும். இது சாஸ்திரங்கள் கூறுவது. ஆகவே அனைவரின்ஆரோக்யத்திற்காகவும், ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்கு மஹாஹோமம் செய்கிறோம் ... அனைவரும் கலந்துகொண்டு பயனடைவீராக.

Tags

Next Story