சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டி

X
சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.

சேலம் : சேலம் மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கியது.

பங்கேற்பு

இதில் சேலம் மாவட்ட பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆண்கள் அணியும், 10 பெண்கள் அணியும் கலந்து கொண்டனர்.

பெண்கள் பிரிவு வெற்றியாளர்கள்

இந்தப் போட்டிகளின் முடிவில் பெண்கள் பிரிவில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி அணி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.

  • ஆத்தூர் பாரதியார் பள்ளி இரண்டாம் இடம்
  • ஏ என் மங்கலம் சென்மேரிஸ் அணி மூன்றாம் இடம்
  • ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி நான்காம் இடம்

ஆண்கள் பிரிவு வெற்றியாளர்கள்

ஆண்கள் பிரிவில் கண்ணங்குறிச்சி குமரன் கைப்பந்து கழக அணி முதலிடம் பிடித்தது.

  • பூலாவரி விஎஸ்ஏ அணி இரண்டாம் இடம்
  • செழியன் பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம்
  • செந்மேரிஸ் அணி நான்காம் இடம்

பரிசளிப்பு விழா

வெற்றி பெற்றோர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. இதில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவு கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

பங்கேற்றவர்கள்

இந்த விழாவில் போலீஸ் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார், செயலாளர் சண்முகவேல், பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர் ராஜா ராம், துணை செயலாளர் ஹரி கிருஷ்ணன், வேங்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
காங்கேயத்தில் காளை சிலை அமைப்புக்கு ஆலோசனை கூட்டம்