எடப்பாடியில் இருந்து பழனிக்கு 50 மாட்டு வண்டிகள் மற்றும் சைக்கிளில் சென்ற பக்தர்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு 50 மாட்டு வண்டிகள் மற்றும் சைக்கிளில் சென்ற பக்தர்கள்
X
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி 50 மாட்டுவண்டிகளில் பழனிக்குச் சென்றனர்.

சேலம் : உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வெகுவிமரிசையாக நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசம் முக்கியமானது. இந்த விழாவையொட்டி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று முருகனை வேண்டிச் செல்வது வழக்கம். மேலும் காவடி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியும் செல்கின்றனர்.

இந்தநிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி 50 மாட்டுவண்டிகளில் பழனிக்குச் சென்றனர்.மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 20 பேர் சைக்கிள்களிலும் பழனிக்குச் சென்றனர்.

பக்தர்கள் கூறியது:

"நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழாவையொட்டி பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் பழனிக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசனம் செய்கிறோம். அதன்படி, இந்த ஆண்டு கடந்த 9-ந்தேதி எடப்பாடியில் இருந்து மாட்டுவண்டிகளில் புறப்பட்டோம்.

மயிலாடு, வட்டமலை, தாராபுரம் வழியாக நேற்று பழனி வந்தோம். இன்று முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு பழனியில் இருந்து மீண்டும் மாட்டுவண்டியில் புறப்பட உள்ளோம்.இந்த மாட்டுவண்டி யாத்திரையில் மாடுகளுக்குத் தேவையான சோளம், தட்டை ஆகியவற்றை வண்டிகளில் எடுத்துவருகிறோம்" என்றனர்.

Tags

Next Story
ஆழ்துளைக் கிணறு அமைப்பதை நிறுத்த வேண்டும் : அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை!