முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகளுடன் மக்கள் கொண்டாட வேண்டும்!

சேலம் : மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மார்ச் 1-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது குறித்து சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.
நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்த தீர்மானம்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும், கட்சிக் கொடி ஏற்றுதல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு
முதல்வர் பிறந்தநாளையொட்டி மத்திய மாவட்ட திமுகவுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆண்களுக்கான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கபடி, தடகளம், இறகுப்பந்து, யோகா, பானை உடைத்தல், வலுதூக்குதல், மகளிருக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கோகோ, ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய மாவட்டக் கூட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மணி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர்கள் தருண், பரணிதரன், மாநகரச் செயலாளர் ரகுபதி, மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன், சரவணன், சாந்தமூர்த்தி, மணமேடு மோகன், பிரகாஷ், ஜெசுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu