சேலம்: மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 9 பேர் கைது

சேலம்: மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 9 பேர் கைது
X
சேலம் அரியானூர் பகுதியில் சிலர் மண்ணுளி பாம்பு விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 9 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சேலம்: அரியானூர் பகுதியில் சிலர் மண்ணுளி பாம்பு விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனவர்கள், வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்க முயல்வது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் சேலம் மின்னாம்பள்ளியை சேர்ந்த ராகதேவன் (26), அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு (25), மற்றும் ஜீவானந்தம் (35), கிருஷ்ணமூர்த்தி (40), செல்வராஜ் (60), சுரேஷ் (38), ராஜமாணிக்கம் (60), மனாப் (24), நாமக்கல்லை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 9 பேர் என தெரியவந்தது.

மேலும் அவர்கள் வனப்பகுதியில் மண்ணுளி பாம்பை பிடித்து வந்து விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து 9 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு மண்ணுளி பாம்பு, ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
அம்மாபேட்டையில் வாரச்சந்தை ஏலம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் ஏலதாரா்கள் தா்னா!