காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்திலிருந்து 76 போ் கொண்ட குழுவினா் காசிக்கு சிறப்பு பயணம்

சேலம் : காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 76 பேர் கொண்ட குழுவினர், ஞாயிற்றுக்கிழமை காசிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை சேலம் மாநகர் மாவட்ட பாஜகவினர் வழியனுப்பி வைத்தனர்.
மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை 3-வது ஆண்டாக நடத்துகிறது
தேச ஒற்றுமையில் மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை 3-வது ஆண்டாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி வாயிலாக, சாதாரண ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், முழுமையாக மத்திய அரசின் செலவில் காசிக்கு சென்று வரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நடப்பாண்டு, கோவையில் இருந்து பனாராஸ் செல்லும் சிறப்பு ரயில் மூலம் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 76 பேர் காசிக்கு ஞாயிற்றுக்கிழமை தங்கள் பயணத்தை தொடங்கினர்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் மட்டுமின்றி, ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள், தொழில்முனைவோர் என பல்வேறு தரப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
சேலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குழுவினருக்கு அவர்களின் உறவினர்கள், பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu