/* */

வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி அமைச்சர் பார்வை

வஉசியின் 150வது பிறந்தநாளையொட்டி பேருந்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படக் கண் காட்சியை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி அமைச்சர் பார்வை
X

வ,உ.சியின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய சுதந்திரபோராட்டத் தியாகி கப்பலோட்டியதமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பள்ளிமாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அவரைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் பார்வையிட்டனர் .

பின்பு ,அதிகாரிகள்,ஆசிரியர்.மற்றும் பள்ளி மாணவர்கள்,மற்றும் பொதுமக்கள், பார்வையிட்டனர். மேலும் இப்பேருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் காணும் விதமாக கொண்டு செல்லப்பட்டு நிறுத்திவைக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Jan 2022 1:44 PM GMT

Related News