/* */

இராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தின் சார்பாக மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
X

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில் அவர்களை விடுதலை செய்வதற்கு ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் தான் விடுதலை செய்வோம் .என்று இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இலங்கையில் உள்ள மக்களே பசியும் பட்டினியுமாக வாழும் நிலையில் சிறையில் நமது மீனவர்களும் உணவில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் என்ற நிலை தெரிந்தும் ஒன்றிய மோடி அரசாங்கம் மீனவர்களை விடுவிப்பதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், இலங்கை அரசுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.

எனவே மீனவர்களை பாதுகாக்கும் பொருட்டும் இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வலியுறுத்தி இன்று இராமேஸ்வரம் கடலில் இறங்கி ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தின் சார்பாக மீனவ சங்க பொறுப்பாளர் மார்க்கஸ் தலைமையில் மீனவர் சங்க மாநில தலைவர் முருகானந்தம் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Updated On: 10 April 2022 5:28 AM GMT

Related News