/* */

பெரம்பலூர் : காவல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்ட காவல்நிலையங்கள் மற்றும் காவல் அலுவகங்களில், லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் : காவல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
X

லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

லஞ்சத்தை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த வாரம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் காவல் அலுவகங்களில் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.

அதன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான்கறிவேன். எனவே நான்,அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்.

லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

மாவட்ட காவல் அலுவகத்தில், பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு தலைமையிலும், அனைத்து காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும், மாவட்ட ஆயுதப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுப்பராமன் தலைமையிலும் காவல்துறையினர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 7:30 AM GMT

Related News