/* */

கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
X

கருநெல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம், தொரடிப்பட்டு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கருநெல்லி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தொரடிப்பட்டு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர்.செல்வம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 473 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் ஆகிய சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

மாடுகளுக்கு தாது உப்பு கலவைகளும்,சிறந்த கிடேரி கன்று பராமரிப்பு மற்றும் சிறந்த கறவை மாடு வளர்ப்பு பயனாளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது, இம்முகாமில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயக்குமார்,சமூக ஆர்வலர்கள் கார்த்திக், ராமச்சந்திரன், ராஜேந்திரன், ரவிக்குமார் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 5:51 PM GMT

Related News