/* */

முத்திரை பதித்த தராசுகள் மற்றும் எடைக் கற்களை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்

சரியான அளவில் விற்பனை செய்ய முத்திரை பதித்த தராசுகள் மற்றும் எடைக் கற்களைப் விற்பனையாளர்கள் பயன்படுத்திட கலெக்டர் அறிவுறுத்தல்.

HIGHLIGHTS

முத்திரை பதித்த தராசுகள் மற்றும் எடைக் கற்களை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
X

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட நுகர்வோர் அமைப்புகளுக்கான காலாண்டு சட்டம் மற்றும் பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுவிநியோக நியாயவிலை கடைகள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். வாரச் சந்தைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் சரியான அளவுடன் கூடிய எடைக் கற்கள் மற்றும் தராசுகள் முத்திரை பதித்து பயன்படுத்தப்படுகிறதா என்று குறித்து தொடர்புடைய அலுவலர்கள் மாதம்தோறும் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது .

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நுகர்வோர்களுக்கு சரியான அளவில் விற்பனை மேற்கொள்ள முத்திரை பதித்த தராசுகள் மற்றும் எடை கற்களை மட்டுமே விற்பனையாளர்கள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோர்கள் அளிக்கும் மனுக்கள் மீது தொடர்புடைய துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.விஜய்பாபு, மாவட்ட வட்டங்கள மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சிவக்கொழுந்து, விழுப்புரம் மண்டல மேலாளர் மாவட்ட துணை பதிவாளர் நளினா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணியக் கழக விழுப்புரம் மண்டல மேலாளர் ஷீனா மற்றும் நுகர்பொருள் அமைப்பு சார்ந்தவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Sep 2021 4:09 PM GMT

Related News