/* */

கள்ளக்குறிச்சி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குவிந்த 368 மனுக்கள்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 368 மனுக்கள் பெறப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் குவிந்த 368 மனுக்கள்
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்.

கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி உட்பட பல்வேறு வகை கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார். மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் 368 மனுக்கள் பெறப்பட்டன.தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் நடந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான இணைய வழி வினாடி - வினா போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி, சி.இ.ஓ., விஜயலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 23 Nov 2021 11:59 AM GMT

Related News