ஆப்பக்கூடல் அருகே கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது!

ஆப்பக்கூடல் அருகே கிராவல் மண் கடத்திய லாரி ஓட்டுநா் கைது!
X
ஆப்பக்கூடல் அருகே கிராவல் மண் கடத்திய வாகன ஓட்டுநரைக் கைது செய்த போலீஸாா், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு : ஆப்பக்கூடல் அருகே கிராவல் மண் கடத்திய வாகன ஓட்டுநரைக் கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியைப் பறிமுதல் செய்தனர்.

பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஒரிச்சேரிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே ஆப்பக்கூடல் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, சுமார் மூன்றரை யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

லாரி ஓட்டுநர் கைது, உரிமையாளர் தேடல்

இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், லாரி ஓட்டுநரான அந்தியூர் பிரம்மதேசம், குந்துக்கல்லாம்பாளையத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் பூபதியைக் (19) கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளரான பிரம்மதேசம், புதுக்கரடியனூரைச் சேர்ந்த பழனிசாமியைத் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
காங்கேயத்தில் காளை சிலை அமைப்புக்கு ஆலோசனை கூட்டம்