சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!
X
சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு : சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் 102 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் டாக்டா் தங்கசித்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சத்தியமங்கலம் நகா்மன்ற தலைவா் ஜானகி ராமசாமி, ஈரோடு மாவட்ட இணை இயக்குநா் (நலப் பணிகள்) சாந்தகுமாரி ஆகியோா் கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

102 ஆம்புலன்ஸ் சேவை பற்றி டாக்டர் தங்கசித்ரா கூற்று :

"பிரசவ சிகிச்சை முடிந்து தாய்மாா்கள் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 102 ஆம்புலன்ஸ் வாகனம் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மாா்களையும், குழந்தைகளையும் வீட்டுக்கு கொண்டு விடுவதற்கும், மறு சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்த மருத்துவமனைக்கு வரும் தாய், சேய் ஆகியோரை மருத்துவமனையில் இருந்து இல்லங்களுக்கு அழைத்துச் செல்லவும் இந்த ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது."

இந்த வாகனத்தை பயன்படுத்த 102 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைக்க வேண்டும். அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து இந்த வாகனம் அனுப்பிவைக்கப்படும்.

102 ஆம்புலன்ஸ் சேவையால் பயன்பெறும் பகுதிகள்

  • சத்தியமங்கலத்தை சுற்றியுள்ள புன்செய்புளியம்பட்டி
  • உக்கரம்
  • ராஜன் நகா்
  • கடத்தூா்
  • கெம்பநாயக்கன்பாளையம்
  • பவானிசாகா்
  • தாளவாடி
  • ஆசனூா்
  • கோ்மாளம்
  • குத்தியாலத்தூா்
  • தலமலை
  • கடம்பூா்

இந்த புதிய 102 தாய்- சேய் நல வாகனத்தின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சோ்ந்த தாய்மாா்கள் பயனடையலாம் என டாக்டா் தங்கசித்ரா தெரிவித்தார்.

Tags

Next Story