/* */

பென்னாகரத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம்: கலெக்டர் தொடங்கி வைப்பு

பென்னாகரத்தில்அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை, கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பென்னாகரத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கூடம்: கலெக்டர் தொடங்கி வைப்பு
X

தர்மபுரி மற்றும் பென்னாகரத்தில் அரசு மருத்துவமனைகளில் , ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை, கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை‌யில், ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆக்சிஜன் உற்பத்தி கூடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கி ஆக்சன் உற்பத்தி மையங்களை தொடங்கி வைத்தார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் திவ்யதர்ஷினி பேசுகையில், கொரோனோ 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகள் என 70 இடங்களில் பி.எம்.கேர் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் கூடிய நிதி ஆகியவற்றின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பென்னாகரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சாந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், தாசில்தார்கள் ராஜராஜன், பாலமுருகன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் காந்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Oct 2021 4:15 AM GMT

Related News