Begin typing your search above and press return to search.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் அதிமுகவினர் மரியாதை
தர்மபுரியில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
HIGHLIGHTS
முன்னாள் முதல்வர் பேரறினர் அண்ணாவின் 113 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தர்மபுரி அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் அதிமுகவினர் தர்மபுரி 4 ரோடு சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று, வரும் 9 மாவட்டஉள்ளாட்சித் தேர்தலில் கடுமையாக உழைத்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி,அதிமுக அமைப்பு செயலாளரான, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிங்காரம். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல். டி.ஆர்.அன்பழகன், பழனிச்சாமி உள்ளிட்ட, அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.