தமிழக அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் டிசம்பர் மாதம்

தமிழக அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் டிசம்பர் மாதம்
மறைவு செய்திகளால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் டிசம்பர் மாதம் உள்ளது.

தமிழக அரசியல் தலைவர்களுக்கு டிசம்பர் மாதம் மோசமான ஒரு மாதமாக அமைந்து வருகிறது/

ஆங்கில வருடத்தின் படி டிசம்பர் மாதம் என்பது வருடத்தின் இறுதி மாதமாகும். இந்த டிசம்பர் மாதம் உலக அளவில் வருடத்தின் இறுதி மாதமாக மட்டுமல்லாது தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையில் இறுதி மாதமாகவும் அமைந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் இந்த மாதத்தில் மறைந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சினிமா உலகிலும், அரசியல் மேடையிலும் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கியவர் எம் ஜி ராமச்சந்திரன் என்கிற எம் ஜி ஆர். அ.தி.மு.க. நிறுவன தலைவராகவும் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகவும் இருந்த எம். ஜி. ஆ.ர் மறைந்தது டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி.

அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை தலைமை தாங்கி நடத்தி கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இறந்து மறைந்த ஜெயலலிதா இவ்வுலகை விட்டு மறைந்த நாள் டிசம்பர் 5 .அரசியலில் அசைக்க முடியாத இரும்பு பெண்மணியாக இருந்த அவர் சினிமாவில் நடித்ததன் மூலம் கலைத்துறையிலும் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினார்.

அந்த வரிசையில் தற்போது திரைத்துறையில் நட்சத்திரமாக ஜொலித்து தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியை தொடங்கி முதலமைச்சராக ஆக முடியவில்லை என்றாலும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் முக்கிய ஒரு அரசியல் சக்தியாகவும் இருந்த நடிகர் விஜயகாந்த் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மறைந்துள்ளார்.

இவர்களுக்கு எல்லாம் முன்னோட்டமாக திராவிட இயக்கங்களின் தந்தை எனப் போற்றப்படும் தந்தை பெரியார் மறைந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி தான். அந்த வகையில் டிசம்பர் மாதம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கையில் இறுதி கட்டத்தை எட்டும் மாதமாக ஒரு கருப்பு மாதமாக அமைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story